»   »  'காக்கிச்சட்டை' ஆசை அருண் விஜய்யையும் விட்டு வைக்கலையே!

'காக்கிச்சட்டை' ஆசை அருண் விஜய்யையும் விட்டு வைக்கலையே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னுடைய சினிமா வாழ்வில் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் அருண் விஜய் நடிக்கவிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல வருடங்கள் ஹீரோவாக வலம்வந்த அருண் விஜய்யை, கடந்தாண்டு வெளியான என்னை அறிந்தால் படம் வில்லனாக மாற்றியது.

கேங்க்ஸ்டர் வேடத்தில் 'விக்டராக' நடித்திருந்த அருண் விஜய்யின் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. மேலும் சிக்ஸ்பேக் வைத்து அஜித்துக்கு ஈடாக அருண் விஜய் அப்படத்தில் நடித்திருந்தார்.

Arun Vijay plays a Police Officer

இந்நிலையில் முதன்முறையாக அறிவழகன் இயக்கும் அடுத்த படத்தில் அருண்விஜய் போலீஸ் வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதுகுறித்து அவர் "என்னை அறிந்தால் படத்திற்குப்பின் நல்ல படத்திற்காக காத்திருந்தேன். அப்போது அறிவழகன் ஒரு திரில்லர் கதையுடன் என்னை சந்தித்தார்.

அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் நான் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன். இது ஒரு வழக்கமான போலீஸ் கதை கிடையாது" என்று தெரிவித்திருக்கிறார்.

கிளீன் ஷேவ் + முரட்டுத் தோற்றம் என்ற ரீதியில் இப்படத்தில் அருண் விஜய்யின் தோற்றம் இருக்குமாம்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியிருக்கிறது. ஈரம், ஆறாது சினம் படங்களைத் தொடர்ந்து மீண்டும் போலீஸ் கதையை இயக்குநர் அறிவழகன் கையிலெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In First Time Arun Vijay Plays a Cop for Arivazhagan's Next.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil