நீங்க வேற லெவல்..அருண்விஜய் வெளியிட்ட ஸ்கை டைவிங் போட்டோஸ்... வெறித்தனமாகக் கொண்டாடும் ஃபேன்ஸ்!

By

சென்னை: மாஃபியா படத்துக்காக பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து, கீழே குதிக்கும்போது எடுத்த புகைப்படங்களை நடிகர் அருண் விஜய் வெளியிட்டுள்ளார்.

நடிகர் அருண் விஜய் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம், மாஃபியா. இதை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார்.

இதில் பிரியா பவானி சங்கர், பிரசன்னா, தலைவாசல் விஜய் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

ஸ்கை டைவிங்

ஸ்கை டைவிங்

இதில் போதைப் பொருள் தடுப்பு அதிகாரியாக, அருண் விஜய் நடித்திருந்தார். இந்தப் படம் வரவேற்பை பெற்றது. ஆக்‌ஷன் காட்சிகளும் விஷூவலும் பேசப்பட்டன. இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் விமானத்தில் இருந்து அருண் விஜய், கீழே குதிக்கும் ஸ்கை டைவிங் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதுபடம் ரிலீஸ் ஆன நேரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

புகைப்படங்கள்

இந்நிலையில் இந்தக் காட்சி படமாக்கப்படுவதற்கு முன், எடுக்கப்பட்டப் புகைப்படங்களை அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 17 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருக்கும்போது, நான் ஸ்கைடைவிங் அடிக்கும் காட்சியை படமாக்கும் முன், எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை என்று குறிப்பிட்டு 6 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கொலமாஸ் தலைவா

கொலமாஸ் தலைவா

கூடவே, இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிடுமாறு இயக்குனர் கார்த்திக் நரேனிடமும் லைகா புரொடக்‌ஷனிடமும் கோரிக்கை வைத்திருக்கிறார் அருண் விஜய். இதை வரவேற்று ஏராளமான ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். கொல மாஸ் தலைவா என்றும் மரணமாஸ் என்றும் சில ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அடுத்த சாப்டர்

அடுத்த சாப்டர்

சிலர், நீங்கள் முறைப்படி ஸ்கை டைவிங் கற்றவர் என்பது தெரியும். அந்தப் படத்தை பார்க்கும் போதே புரிந்துகொண்டோம் என்று தெரிவித்துள்ளனர். சிலர் நீங்க வேற லெவல் பாஸ்...இந்த காட்சி வரும்போது மொத்த தியேட்டருமே அதிர்ச்சியாக நின்றுவிட்டது என்று சிலர் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தின் அடுத்த சாப்டருக்கு காத்திருக்கிறோம் என்று சிலர் கூறியுள்ளனர்.

முறைப்படி பயின்றவர்

முறைப்படி பயின்றவர்

இவ்ளோ உயரத்தில் குதிச்சீங்களா? நம்பவே முடியலையே என்றும் உங்கள் திறமைக்கு இன்னும் உயரத்துக்கு போவீங்க பாஸ் என்று சிலரும் கூறியுள்ளனர். நடிகர் அருண் விஜய், முறைப்படி ஸ்கை டைவிங் பயிற்சிப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 வருடத்துக்கு முன் லண்டனில் பயிற்சிப் பெற்ற அருண் விஜய், அதற்கான சர்வதேச லைசன்ஸையும் பெற்றுள்ளார்,

அக்னிச்சிறகுகள்

அக்னிச்சிறகுகள்

இப்போது அவர் மூடர்கூடம் நவீன் இயக்கும் அக்னிச்சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ரஷ்யா உட்பட வெளிநாடுகளில் நடந்துள்ளது. அடுத்து ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கும் சினம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே விவேக் இயக்கும் பாக்ஸர் படத்திலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X