ரோட்டு கடையில் மீன் பொறித்த அருண்விஜய்... அம்மாவின் அன்பை உணர்வதாக உருக்கம்
ராமேஸ்வரம் : அருண் விஜய், டைரக்டர் ஹரியுடன் முதல் முறையாக இணைந்துள்ள படம் ஏவி 33. அருண் விஜய்யின் 33 வது படமாக உருவாகி வரும் புதிய படத்திற்கு ஏவி 33 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷுட்டிங் ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது.
இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். மாஃபியா படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக அருண் விஜய் படத்தில் பிரியா பவானிசங்கர் நடிக்கும் படம் இது. மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராதிகா, யோகிபாபு, அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

டிரம்ஸ்டிக் ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் சக்திவேல் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ராமேஸ்வரம், அதனைச் சுற்றி உள்ள பகுதிகள், காரைக்குடி போன்ற இடங்களில் படத்தின் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த படம் தொடர்பான ஷுட்டிங் ஸ்பாட் படங்கள் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. இதற்கிடையில் படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. கையில் கட்டுடன் அருண் விஜய் படுத்திருக்கும் ஃபோட்டோக்கள், கட்டுடன் சண்டைக் காட்சிகளில் நடித்த ஃபோட்டோக்களும் வெளியாகின.
அருண் விஜய், வேஷ்டி சட்டையில் கிராமத்து கெட்அப்பில் இருக்கும் ஃபோட்டோக்கள் என அடுத்து வெளியாகும் ஃபோட்டோக்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டிக் கொண்டே போகிறது.
இந்நிலையில் இன்று, வயதான பெண் ஒருவரின் தோளில் கை போட்டபடி ரோட்டுக் கடையில் மீன் பொறிப்பது போன்ற ஃபோட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் அருண்விஜய். அதோடு அவர் பதிவிட்டுள்ள உருக்கமான கேப்ஷன் தான் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த ஃபோட்டோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது.
Recommended Video
அருண் விஜய் தனது பதிவில், ரோட்டுக் கடையில் உணவருந்திய போது..!! இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன்.. இந்த அன்பு தான் நம்மளை இயக்கிக் கொண்டிருக்கிறது.. என குறிப்பிட்டுள்ளார். இந்த ஃபோட்டோவை அருண்விஜய் பகிர்ந்த 2 மணி நேரத்திலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











