எம்மதமும் சம்மதம்...வைரலாகும் அருண் விஜய்யின் அசத்தல் போஸ்ட்

சென்னை : அருண் விஜய் தற்போது டைரக்டர் ஹரி இயக்கும் ஏவி 33 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள தனது 33 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பற்றிய ஃபோட்டோக்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அப்டேட் வெளியிட்டு வருகிறார் அருண் விஜய்.

இந்த படத்தின் ஷுட்டிங் ராமேஸ்வரம், பழனி, காரைக்கடி போன்ற முக்கிய இடங்களில் நடைபெற்றது. ராமேஸ்வரம் அருகில் உள்ள தீவு ஒன்றிற்கும் படகில் சென்று ஷுட்டிங் நடத்தி உள்ளனர்.

செம ஆக்டிவ்

செம ஆக்டிவ்

இந்த படத்தின் ஷுட்டிங்கின் போது அருண் விஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டது. அதையும் ஃபோட்டோவுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார் அருண் விஜய். முறுக்கு மீசை, வேஷ்டி சட்டையில் அமர்ந்திருக்கும் கெத்தான ஃபோட்டோ, ஷுட்டிங்கின் போது ரோட்டோர கடையில் சாப்பிட்டது, அப்போது அந்த கடையில் மீன் பொறித்தது போன்ற படங்களை பகிர்ந்தார்.

நாகப்பட்டினத்தில் ஏவி 33

நாகப்பட்டினத்தில் ஏவி 33

தற்போது ஏவி 33 டீம், அடுத்த கட்ட ஷுட்டிங்கிற்காக நாகப்பட்டினம் சென்றுள்ளது. இதையும் ஃபோட்டோவுடன் அப்டேட் செய்துள்ளார் அருண் விஜய். சோஷியல் மீடியாவில் படுஆக்டிவாக இருக்கும் அருண் விஜய், அங்கு நாகூர் தர்ஹாவிற்கு சென்று, சிலருடன் சேர்ந்து வழிபாடு நடத்திய ஃபோட்டோக்களையும் பகிர்ந்துள்ளார்.

எம்மதமும் சம்மதம்

எம்மதமும் சம்மதம்

அதோடு அவர் பதிவிட்டுள்ள கேப்ஷனில், ஷுட்டிங்கிற்காக வந்த போது நாகூர் தர்ஹாவிற்கு சென்றேன். கடவுள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். எம்மதமும் சம்மதம் என குறிப்பிட்டுள்ளார். அருண் விஜய்யின் இந்த கேப்ஷன், அதோடு அவர் பதிவிட்டுள்ள ஃபோட்டோக்கள் தான் செம வைரலாகி வருகின்றன.

ராமேஸ்வரம் கோயில்

ராமேஸ்வரம் கோயில்

முன்னதாக பிஸியாக இருக்கும் நாகூர் நகர வீதிகளில் ஷுட்டிங் நடந்த போது எடுத்த ஃபோட்டோக்களையும் அருண்விஜய் பகிர்ந்திருந்தார். இதற்கு முன் ராமேஸ்வரத்தில் ஷுட்டிங் நடந்த போது ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று கோயில் யானையிடம் ஆசிர்வாதம் வாங்கிய ஃபோட்டோவையும் அவர் பகிர்ந்திருந்தார்.

அண்ணனாக சமுத்திரக்கனி

அண்ணனாக சமுத்திரக்கனி

தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த படத்தில் இருந்து சமீபத்தில் தான் பிரகாஷ் ராஜ் விலகினார். அவருக்கு பதில் அருண் விஜய்யின் அண்ணன் ரோலில் சமுத்திரக்கனி மாற்றப்பட்டார். இந்த படத்தில் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

8 ஆண்டுகளுக்கு பிறகு கங்கை அமரன்

8 ஆண்டுகளுக்கு பிறகு கங்கை அமரன்

யோகிபாபு, புகழ், ராதிகா, அம்மு அபிராமி, கருடா ராம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் கங்கை அமரன் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இதில் ஜோதிடர் வேடத்தில் தான் கங்கை அமரன் நடிக்கிறாராம்.

இத்தனை படங்களா

இத்தனை படங்களா

அருண் விஜய் கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கிய மாஃபியா : சேப்டர் 1 படத்தில் நடத்தார். தற்போது ஜிஎன்ஆர் குமரவேலவன் இயக்கும் சினம், நவீன் இயக்கும் அக்னி சிறகுகள், அறிவழகன் இயக்கும் பார்டர் போன்ற படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X