»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Subscribe to Oneindia Tamil

ரிஸ்க் பிடிக்கும்!

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் போது நான் ரிஸ்க் எடுத்துச் செய்திருந்தேன். தார்ச்சாலையில், எந்தவிதமெத்தையும் விரிக்காமல், தரதரவென இழுத்துச் செல்லப்படும் காட்சியில் தத்ரூபமாக நடித்திருந்தேன்.

விஜயகாந்த் சாரின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷ் அந்தக் காட்சியை அமைத்திருந்தார். அதைப்பார்த்து விஜயகாந்த் பாராட்டினார். ஆனால், இப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து நடிக்க வேண்டாம் என்று அறிவுரைகூறினார், அப்பா கூட திட்டினார், ஏன் இப்படி ரிஸ்க் எடுத்து நடிக்கிறாய் என்று.

இந்த காட்சியில் நடிக்கும்போது, வலது கையில் காயம் ஏற்பட்டது. எலும்பு முறிந்து இன்னும் கூட விரல்களைசரியாக மடக்க முடியவில்லை. தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை,ஆக்ஷன்தான் எனக்குப் பிடிக்கும்.

டூப் போடுவதை முடிந்தவரை தவிர்க்கப் பார்ப்பேன். ஒரு படத்தில், மாடியிலிருந்து குதிக்கும் காட்சியில்சாதாரணமாக அதைச் செய்தேன். ரொமான்டிக் ஹீரோவாக இருப்பதை விட ஆக்ஷன் ஹீரோவாக இருக்கவேஆசைப்படுகிறேன்.

அஜீத், விஜய்யுடன் நடிக்க ரெடி....

2 ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிக்க எனக்குத் தயக்கமில்லை. ரெடிதான். ஆனால், நல்ல சப்ஜெக்ட் கிடைக்க வேண்டும்,கதை இருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை, ஈகோ மோதல் இருக்காது. கதையைச் சொன்ன மாதிஎடுத்தாலே போதும். அதை விட்டுவிட்டு, கதை சொல்லும் போது ஒரு மாதியும், எடுக்கும் போது, ஒரு ஹீரோவைஉயர்த்தியும், இன்னொருவரை தாழ்த்தியும் எடுத்து விட்டால் குழப்பமாகி விடும்.

சரத் சார் மாதியான ஹீரோக்களுடன் நடிப்பது 2 ஹீரோ சப்ஜெக்டாகி விடாது. சரத் சார் போன்றவர்கள் எங்களைவிட சீனியர் நடிகர்கள், அனுபவம் மிக்கவர்கள். அவர்களுடன் நடிக்கும்போது, நாங்கள் எங்களைஹீரோக்களாகவே கருத முடியாது. ஆனால் விஜய், அஜீத் போன்ற இப்போதைய ஹீரோக்களுடன் நடிக்க நான்ஆர்வமாக இருக்கிறேன்.

2 ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிப்பதில் ஒரு திரில் உண்டு. அது நல்ல ஆரோக்கியமான போட்டியும் கூட.

அப்பா படங்களில் நடிக்க வந்த காலம் அவ்வளவு நல்ல காலம் இல்லை. அது மசாலாப் படங்கள் அதிகமாக வரத்துவங்கிய காலம். எனவே அப்பா ஆரம்ப காலங்களில் நடித்த படங்கள் எனக்கு அவ்வளவாக பிடிக்காது.அப்பாவும் சில தவறான கேரக்டர்களை தேர்வு செய்து அப்போது நடித்திருந்தார்.

இருந்தாலும், காளி, அழகே உன்னை ஆராதிக்கிறேன் போன்ற சில படங்களில் அப்பாவின் கேரக்டர் எனக்குப்பிடிக்கும். அதிலும் காளி படத்தில், ரஜினி சார் கேரக்டருக்கு சமமான கேரக்டல் அப்பா நடித்திருப்பார். அதேபோல,அழகே உன்னை ஆராதிக்கிறேன் படம் ஒரு கவிதை போல இருக்கும்.

இப்போதைய படங்களில் கிழக்குச் சீமையிலே, பாரதி கண்ணம்மா என பல படங்கள் எனக்குப் பிடிக்கும். அவர்நடித்த படங்களில் 90 சதவீத கேரக்டர்களை சிறப்பாக செய்திருப்பார். எதிலுமே அவர் சோடை போனதில்லை.

சிலர் சொல்வார்கள், விஜயகுமார் இப்போதுதான் நன்றாக நடிக்கிறார். முன்பு ஹீரோவாக நடித்ததை விடஇப்போதுதான் சிறப்பாக செய்கிறார் என்பார்கள். அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

அப்போது அவருக்குக் கிடைத்த கேரக்டர்கள் அப்படி, டைரக்டர்கள் அப்படி. இப்போது கிடைத்த டைரக்டர்கள்அவரது நடிப்புத் திறமையை பயன்படுத்திக் கொண்ட விதம் வேறு. இதுதான் அவரது நடிப்பில் தெரியும்வேறுபாட்டுக்குக் காரணம். காலத்திற்கேற்ப மாறிக் கொண்டுள்ளார் அப்பா என்றுதான் நான் சொல்வேன்.

நடிகர் திலகத்துடன் நடிக்க ஆசை ...

நடிகர் திலகம் சிவாஜி சாருடன் நடிக்க மாட்டோமா என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது. சிவாஜி சாருடன் ஒருபிரேமிலாவது நடிக்க மாட்டோமா என்று அத்தனை நடிகர்களும் ஏங்குவது வழக்கம். அந்த வசையில் நானும்இருக்கிறேன்.

எனது நடிப்பைப் பொருத்தவரை சிவாஜி சாரிடம் ஆலோசனை எதுவும் கேட்டதில்லை. காரணம், அவருக்கு முன்நான் ஒரு குழந்தை மாதிரி. அவடம் பயம் கலந்த மரியாதை உண்டு. எனவே நெருங்கிப் போய் ஆலோசனைகேட்கும் அளவுக்கு தைரியம் இல்லை. ஆனால் பிரபு சாரிடம் எனக்கு நெருக்கம் அதிகம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil