»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Posted By:
Subscribe to Oneindia Tamil

எனக்குப் பிடித்த ஹீரோக்கள் ...

எம்.ஜி.ஆர். எனது சிறு வயது ஹீரோ. அவர் படங்கள் என்றால் எனக்கு வெறி.

4 வயது சிறுவனாக இருந்தபோது, எம்.ஜி. ஆரை முதன் முதலாக நேரில் பார்த்தேன். அப்போது, எம்.ஜி.ஆர்.சுடப்பட்டு, சிகிச்சை முடிந்து திரும்பிய நேரம். ஒரு விழாவின்போது, அப்பாவுடன் நான் அங்கு சென்றபோது,எம்.ஜி.ஆர். அப்பாவை பார்த்து விட்டுக் கூப்பிட்டார். நானும், அப்பாவும் எம்.ஜி.ஆரிடம் சென்றோம்.

என்னைப் தூக்கி தனது மடியில் வைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். கன்னத்தில் தட்டிக் கொடுத்து என்ன பேர்என்றார், என்ன படிக்கிறாய் என்று கேட்டார். அவரது குரல் சரியாகவில்லை என்பதால் எனக்குப் புரியவில்லை.பிறகு பக்கத்தில் இருந்தவர்கள் கூறிய பிறகு, பெயரைக் கூறினேன்.

அது மறக்க முடியாத அனுபவம். கனவாக இருந்த ஒன்று நிறைவேறிய சந்தோஷம் எனக்கு.

பிறகு, ரஜினி சார். அவர், என்னைப் பொறுத்தவரை, எனது அப்பாவுக்கு அடுத்து நான் மதிக்கும் நபர். காரணம்,நான் பிறந்ததிலிருந்து என்னைப் பார்த்து வருபவர் அவர். நான் முதல் படத்தில் நடிக்க முடிவான பிறகு, நானும்அப்பாவும், ரஜினி சார் வீட்டுக்குப் போனோம். அப்போது அவர் ஆச்சயப்பட்டார், காரணம் எனது வயது.அப்போதுதான் கல்லூரிப் படிப்பில் நான் நுழைந்திருந்த நேரம். 19 வயதுதான் ஆனது.

என்ன அருண், அதுக்குள்ள ஹீரோவா? வயது ரொம்ப கம்மியாச்சே என்று ஆச்சரியப்பட்டார். இருந்தாலும்,வாழ்த்தி, ஆசிர்வதித்தார். அதேபோல, முதல் படமான, முறை மாப்பிள்ளை படத்தின் பூஜையின்போது நேரில்வந்து ஆசிர்வதித்தார். அதை விட முக்கியம், பூஜையின்போது நடந்த நிகழ்ச்சி.

பூஜை முடிந்து, கேமரா ஓடத் துவங்கியது. அப்போது திடீரென ரஜினி சார் தனது சீட்டிலிருந்து எழுந்து, எனதுகையைப் பிடித்து நடக்கத் தொடங்கினார். அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர்ரஜினி சார், எனது நெற்றியில், திலகமிட்டார், பிறகு கேமராவைப் பார்த்து (அதாவது ரசிகர்களைப் பார்த்து) கையை,என்னை நோக்கிக் காட்டினார். இதை மிகப் பெய பாக்கியமாக கருதுகிறேன். இது முறை மாப்பிள்ளை படத்தின்முதல் காட்சியில் வரும்.

இப்போது நான் ஒரு வளரும் கலைஞன். எனது படங்கள் அனைத்தும் சோதனை ரீதியில் அமைவதே. இந்தப்படங்கள் மூலம் கிடைக்கும் அனுபவங்களை வைத்து எதிர்காலத்தில் நிச்சயம் கமல் சார் போல வித்தியாசமானகேரக்டர்களை செய்வேன்.

தமிழில் மட்டுமே இப்போது கவனம் செலுத்த விரும்புகிறேன். தெலுங்கில் ஒரு பட வாய்ப்பு வந்தது. ஆனால்தமிழில் சாதித்து விட்டு பிற மொழிகளுக்குச் செல்லலாம் என்று விட்டு விட்டேன். இருப்பினும் இப்போது ஷிவானிஎன்ற தெலுங்குப் படத்தில் புக் ஆகியுள்ளேன். காதல் கதை.

நம்முடைய தமிழ் சினிமாவில், தமிழர்களை விட பிற மொழிக்காரர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். அது நமதுமொழிக்குக் கிடைத்த பெருமையாகக் கொள்ள வேண்டும். அதை வேறு மாதியாக பார்ப்பது தவறு. கலைக்குஎல்லையே கிடையாது.

பணம் எனக்கு முக்கியமல்ல. போதுமான அளவுக்கு பணம் எனக்கு இருக்கிறது. இருந்தாலும் அது எல்லாம் எனதுஅப்பாவின் சொத்து. அவர் சேர்த்து வைத்த சொத்தை சாப்பிட்டுத் தீர்க்க எனக்கு விருப்பமில்லை. எனது சொந்தக்காலில் நிற்பதையே விரும்புகிறேன்.

எதிர்காலத்தில் ஆதரவற்றோர், உடல் ஊனற்றோர் ஆகியோருக்கு உதவிகள் செய்ய ஆசை உண்டு. அதற்கானதிட்டத்தை இப்போது சொல்ல விரும்பவில்லை. நிச்சயம் அவர்களுக்கு உதவுவேன்.

எனது பிறந்தநாளின்போது அநாதை ஆசிரமங்களுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். அவர்களுடன்அன்றைய தினத்தை செலவழிப்பேன். கடந்த பிறந்தநாளின்போது, 500 உடல் ஊனற்றோரை அழைத்துக் கொண்டுசாப்பிட்டேன். பின்னர் அவர்கள் அனைவரையும் சென்னை ஆல்பர்ட் தியேட்டருக்கு அழைத்துச் சென்றுஅவர்களுக்காக விசேஷமாக திரையிடப்பட்ட அன்புடன் படத்தைக் காண்பித்தேன். அவர்களது முகத்தில் தெத்தசந்தோஷம் எனக்கு சொர்க்கமாக இருந்தது.

புத்தாண்டு வாழ்த்துக்கள் ...

எனது ரசிகர்களுக்கு இந்தத் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் நான் கூற விரும்புவது, எதிலுமே முயற்சி செய்யுங்கள்.தளர்ந்து விடாதீர்கள். ஒன்று கிடைக்காவிட்டால், மனம் ஒடிந்து போகாது, அடுத்ததிற்கு முயற்சி செய்யுங்கள்.கண்டிப்பாக ஒரு நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

பெண்களுக்கு ஒரு அட்வைஸ். . .

காதலிப்பது தவறில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் காதல் வருவது சகஜமானதுதான். ஆனால் ஓடிப் போய்கல்யாணம் செய்து கொள்ளாதீர்கள். அம்மா, அப்பாவை சமாதானம் செய்து கல்யாணம் செய்து கொள்ளுங்கள்.அவர்கள் வழிக்கு வரவில்லையா, பட்டினி கிடந்து போராடுங்கள், சாப்பிடாதீர்கள், முரண்டு பிடியுங்கள், அடம்பிடியுங்கள். அதை விட்டு விட்டு ஓடிப் போவது தவறு.

இந்த வருடம் அமைதியாக, வெற்றிகரமானதாக அமைய எனது வாழ்த்துக்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil