»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜயகுமார் என்ற நவரச நடிகன் மகன் என்ற வெயிட்டான பின்னணியுடன் கூடிய அருண்குமார், இன்றைய தமிழ்சினிமாவின் "சிக் கதாநாயகர்களில் ஒருவர்.

முறை மாப்பிள்ளையில் அறிமுகமாகி அன்புடன் தமிழ்த் திரையுலகில் வலம் வருபவர். இப்போது பாண்டவர்பூமியில் பிரவேசம் செய்து வருகிறார். இதுவரை நடித்துள்ள படங்கள் ஏழு. இப்போது, அழுத்தமான முத்திரைபதிக்க காத்திருக்கிறார்.

அருண்குமாரை தமிழ்ப்புத்தாண்டு சிறப்பிதழுக்காக சந்தித்தபோது, வெயிலை மறக்கும் வண்ணம் குளுமையாகதனது எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டார்.

இப்ப என்ன பண்றீங்க அருண்குமார்?..

முதல் முறையாக ஒரு பெரிய டைரக்டன் படத்தில் நடிக்கிறேன். படத்தின் பெயர் பாண்டவர் பூமி. டைரக்டர் சேரன்.எனது ஐந்தாண்டு கால திரையுலக வாழ்க்கையில் முத்திரை பதிக்கப் போகும் படம் இது. இந்தப் படத்தை அதிகம்எதிர்பார்த்துள்ளேன்.

அன்புடன் படத்தில் எனது நடிப்பைப் பார்த்து விட்டு, அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே, எனது நடிப்பைமட்டுமே நம்பி, இந்தப் படத்தை சேரன் எனக்கு அளித்துள்ளார். அவரது நம்பிக்கைக்காக நான் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். இந்தப் படத்தின் கதையும் மிக அருமையாக உள்ளது. நகரத்திலிருந்து, கிராமத்தில் வந்துகுடியேறும் என்ஜீனியர் பற்றிய கதை இது.

சமுத்திரம் கை நழுவியது..

ஆக்சுவலாக, நான் மிகப் பெய டைரக்டர் ஒருவரது படத்தில் அறிமுகமாக நேரிட்டால், அதுகே.எஸ்.ரவிக்குமாராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அவரது சமுத்திரம் என்ற படத்திற்காகஎன்னை அணுகினார். ஆனால், அந்த சமயத்தில், நான் சேரன் சாரின் பாண்டவர் பூமியில் புக் ஆகியிருந்தேன்.இதனால் சமுத்திரம் என் கையை விட்டுப் போனது.

பாண்டவர் பூமியில் படம் எனக்கு மிகப் பெரிய பிரேக்கைக் கொடுக்கும் என்று நிச்சயம் நம்புகிறேன். இந்தப்படத்தில் இன்னொரு விசேஷம் உள்ளது. அது, எனது அப்பா விஜயகுமார், எனது அப்பாவாகவே படத்தில்வருகிறார்.

அப்பாவுடன் ...

என்னைப் பொறுத்தவரை, விஜயகுமாரின் மகன் என்று கூறி சான்ஸ் பிடிக்க விரும்பவில்லை. எனது சொந்தக்காலில் நிற்க விரும்புகிறேன். என்னை நிரூபிக்க விரும்புகிறேன். அப்பா கூட கேட்பார், எங்காவது சொல்லவாஎன்று, நான் கண்டிப்பாக மறுத்து விட்டேன்.

அப்பாவுக்கு சினிமாவுலகில் 30 ஆண்டு கால அனுபவம் உண்டு. அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர். அவரைப் போலநடிக்க வேண்டும் என்று முன்பு நான் நினைத்ததுண்டு. ஆனால் இப்போது அது முடியுமா என்று தெரியவில்லை.அந்தளவுக்கு கேரக்டர்கள் பண்ணியிருக்கிறார் அவர்.

தான் செய்யும் ஒவ்வொரு கேரக்டரையும் ஈடுபாட்டோடு, அதீத கவனத்துடன் அவர் செய்கிறார். வந்தோம்,போனோம் என்ற பேச்சே அவடம் கிடையாது. முன்பு போல அவர் இப்போது அதிக படங்களில் நடிப்பது இல்லை.குறைத்துக் கொள்ள கூறி விட்டோம். அவரும் குறைத்துக் கொள்ளத் துவங்கி விட்டார்.

அப்பாவின் உற்சாகம் ..

நான் இடையில் படங்கள் அதிகம் இல்லாமல் இருந்த நேரத்தில் எனது குடும்பம் எனக்கு மிக ஆறுதலாக இருந்தது.என்னைத் தட்டிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், நிச்சயம் நல்ல வாய்ப்பு வரும் என்று தைரியம் கொடுத்தார்கள்.குறிப்பாக அப்பா, நான் சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக என்னை பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளச்சொல்லி உற்சாகப்படுத்தினார்.

இடையில் நிறுத்தியிருந்த கிளாசிக்கல் மியூசிக் பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளேன். அடுத்த படத்தில் பாடவேண்டும் என்பது எனது ஆசை. நிச்சயம் பாடுவேன்.

நம்பிக்கை வீண் போகவில்லை ...

சேரன் படத்தைத் தொடர்ந்து புத்தன் என்றொரு படம் வந்துள்ளது. புத்தன் படத்தில் எனது கேரக்டர்வித்தியாசமானது. இதில் மொட்டைத் தலையுடன் நடிக்கவுள்ளேன். அதைத் தொடர்ந்து சந்திரா என்று ஒரு படம்.இதுவும் கூட வித்தியாசமான கதைதான். அன்புடன் படத்தைத் தொடர்ந்து பல படங்கள் வந்தன.

எனக்குப் பணம் முக்கியமல்ல. எனது கேரக்டர் பேசப்பட வேண்டும். அதனால்தான் கடந்த ஐந்து ஆண்டுகளில்நான் 7 படங்கள் மட்டுமே பண்ண முடிந்தது.

எனது காலத்தில் வந்த பிற இளம் நடிகர்கள் எல்லாம் 20, 25 படங்கள் முடித்து விட்டனர். ஆனால் நான் இத்தனைகுறைந்த படங்களைப் பண்ணியுள்ளதற்கு நானும் கூட ஒரு காரணம். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, நிறையஇடைவெளியை நானே உருவாக்கிக் கொண்டு விட்டேன். அதை இப்போது உணர்கிறேன்.

அன்புடன் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர். அந்தப் படத்தை அத்தனை பேரும் என்னைப் பாராட்டினார்கள். படம்முழுவதும் எனது நடிப்பு பேசப்பட்டது. சண்டைக் காட்சிகளில் நான் அதிக ரிஸ்க் எடுத்து பண்ணியிருந்தேன்.அதைப் பாராட்டதவர்களே கிடையாது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil