»   »  குவிஸ் போட்டியில் விளையாடும் மக்களுக்கு தைரியத்தை தருகிறேன்... அரவிந்த் சாமி

குவிஸ் போட்டியில் விளையாடும் மக்களுக்கு தைரியத்தை தருகிறேன்... அரவிந்த் சாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொண்ணூறுகளில் சினிமா கதாநாயகன்... இன்றைக்கு வில்லன் அரவிந்த் சாமி எப்போதும் கனவு நாயகன்தான். விஜய் டிவியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை அவரைப் போலவே அழகாக நடத்துகிறார் என்ற கருத்து நிலவுகிறது. அரவிந்த் சாமி அழகானவர் மட்டுமல்ல அறிவாளியும் கூடத்தான் என்பதை இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். அரவிந்த் சாமியின் ஸ்டைலான உச்சரிப்பு, போட்டியாளர்களிடம் பேசும் விதம் ரசிகர்களை கவர்ந்துள்ளதால் நிகழ்ச்சியின் டிஆர்பி எகிறத் தொடங்கியுள்ளது.

தளபதி கலெக்டர், ரோஜா விஞ்ஞானி, மும்பை ரிப்போர்ட்டர் என 90 களில் மணிரத்னம் படத்தின் ஹீரோவாக நடித்து கல்லூரி பெண்களின் கனவுகளில் வலம் வந்தவர் அரவிந்த் சாமி. சில படங்களுடன் காணாமல் போனவர், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வில்லனாக களமிறங்கியிருக்கிறார்.

கடல், தனி ஒருவன் என தொடங்கிய பயணம், டியர் டாட், போகன், தனி ஒருவன் தெலுங்கு ரீமேக் வில்லன் என தொடர்கிறது. இன்றைக்கு டிவியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். எப்படி போகிறது இந்த நிகழ்ச்சி இதில் உள்ள சவால்கள் என்ன என்று பிரபல வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி.

சின்னத்திரை நிகழ்ச்சி

சின்னத்திரை நிகழ்ச்சி

விஜய் டிவியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை இப்போது நடத்தி வருகிறார் அரவிந்த் சாமி. அமிதாப் சார் பண்ண ஷோவுக்கு அப்புறம் மற்ற எந்த கேம் ஷோவும் நான் பார்க்கலை. ஆனா, எனக்குப் பிடிச்ச விஷயங்கள் `நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி'யில நிறைய இருக்கு என்கிறார்.

தைரியம் அவசியம்

தைரியம் அவசியம்

இந்த நிகழ்ச்சி இது ஒரு க்விஸ் போட்டி, பணம்கிறதையும் தாண்டி, பலருடைய கனவுகளும் இதில் இருக்கு. இந்தப் பணம் அவங்க கனவை நனவாக்க உதுவுது. இது விளையாட ரொம்பத் தைரியம் வேணும். ஆன்சர் தெரியுறதைவிட, தைரியமா விளையாடணும். அந்தத் தைரியத்தை நான் அவங்களுக்குக் கொடுக்கணும். இந்த சேலஞ்ச் எனக்குப் பிடித்ததால் டிவி நிகழ்ச்சி நடத்த ஓகே சொன்னேன் என்கிறார் அரவிந்த் சாமி.

எல்லாம் ஒரு சேலஞ்ச்தான்

எல்லாம் ஒரு சேலஞ்ச்தான்

என்னால எந்த ஒரு விஷயம் செய்ய முடியாதுனு நினைக்கிறனோ, அதை செஞ்சு பார்க்கணும்னு விரும்புவேன். இந்த ஷோ பண்றதுக்கு முன்னாடி என்னால தமிழ் சரளமாப் பேச முடியாதுனு நினைச்சேன். லைவ் ஷோ பண்ண முடியுமானு டவுட் இருந்தது. இப்ப அதை செஞ்சு பார்க்கிறேன் என்கிறார் அரவிந்த் சாமி.

சுவாரஸ்யமான சவால்கள்

சுவாரஸ்யமான சவால்கள்

ஒரு நடிகனாவும் மனுஷனாகவுமே இந்தத் தேடல் இருக்கணும். அப்படி ஒரு விஷயம் பண்ணணும்னா உழைப்பு தேவை. முதல் எபிசோடுல கொஞ்சம் நெர்வஸ்னஸ் இருந்துச்சு. இப்ப பெட்டர். இது ஒரு சுவாரஸ்யமான அனுபவம். வாழ்க்கையே இது மாதிரியான சவால்களாலதானே சுவாரஸ்யமாகுது என்று கூறியுள்ளார் அரவிந்த் சாமி.

English summary
Life is a challange and interesting says Actor Arvind swamy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil