»   »  இமேஜ் பயம்: நண்பேன்டா விஷால் படத்தில் இருந்து வெளியேறிய ஆர்யா

இமேஜ் பயம்: நண்பேன்டா விஷால் படத்தில் இருந்து வெளியேறிய ஆர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நண்பன் விஷாலின் இரும்புத் திரை படத்தில் இருந்து வெளியேறியுள்ளார் ஆர்யா.

விஷால் தயாரித்து நடித்து வரும் படம் இரும்புத் திரை. மித்ரன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். விஷாலும், ஆர்யாவும் நெருங்கிய நண்பர்கள் என்பது கோலிவுட் அறிந்ததே.

Arya is no longer Vishal's villain

இந்நிலையில் நண்பனுக்காக விஷால் இரும்புத் திரை படத்தில் வில்லனாக நடிக்க சம்மதித்தார். ஏற்கனவே ஒரு ஹிட் கொடுக்க ஆர்யா கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்காது என்று அவர் நினைக்கிறார். இதனால் அவர் விஷாலின் படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். படத்தில் இருந்து வெளியேறியதை ஆர்யாவே உறுதி செய்துள்ளார்.

ஆர்யா கடம்பன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அவர் பெரிதும் எதிர்பார்க்கிறார்.

English summary
Arya has opted out of good friend Vishal's upcoming movie Irumbu Thirai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil