»   »  பொங்கலுக்கு ஏகப்பட்ட இலவசங்கள், இந்தா நானும் வாரேன்: ஆர்யா கிண்டல்

பொங்கலுக்கு ஏகப்பட்ட இலவசங்கள், இந்தா நானும் வாரேன்: ஆர்யா கிண்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கலுக்கு பல படங்கள் ரிலீஸாவதை நடிகர் ஆர்யா கிண்டல் செய்துள்ளார்.

பொங்கலுக்கு விஜய்யின் பைரவா மட்டும் சோலோவாக ரிலீஸாகவிருந்தது. இந்நிலையில் கத்திச் சண்டை பொங்கல் ரேஸுக்கு வந்த வேகத்தில் விலகியது. டிசம்பர் 23ம் தேதி ரிலீஸாகவிருந்த சூர்யாவின் எஸ் 3 படம் பொங்கலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

பொங்கலுக்கு பைரவாவுடன் ப்ரூஸ் லீ படமும் வருகிறது என்று ஜி.வி. பிரகாஷ் அறிவித்துள்ளார். இப்படி ஆளாளுக்கு அறிவித்து தற்போது பொங்கலுக்கு 6 படங்கள் வெளியாக உள்ளன.

இதை நடிகர் ஆர்யா ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பொங்கலுக்கு ஏகப்பட்ட இலவசங்கள் வருகிறது போன்று.. என் படமான கடம்பனும் பொங்கலுக்கு வருகிறது என் நானும் அறிவிக்கிறேன். சும்மா விளையாட்டுக்கு #Kadamban4Pongal 💪💪💪 என தெரிவித்துள்ளார்.

English summary
Actor Arya tweeted that, 'Looks like there r lots of freebies for Pongal .. even I am announcing my film #Kadamban for Pongal #justforfun 😂😂😂😂#Kadamban4Pongal 💪💪💪'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil