»   »  என்னையா கலாய்க்கற... ஆடு மச்சி ஆடு... சந்தானத்தைப் பழி வாங்கிய ‘நண்பேண்டா’ ஆர்யா!

என்னையா கலாய்க்கற... ஆடு மச்சி ஆடு... சந்தானத்தைப் பழி வாங்கிய ‘நண்பேண்டா’ ஆர்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: தொடர்ந்து திரைப்படங்களில் தன்னைக் கலாய்த்து வரும் சந்தானத்தைப் பழிக்குப் பழி வாங்கியுள்ளார் நடிகர் ஆர்யா.

நடிகர் ஆர்யாவும் சந்தானமும் திரைக்கு வெளியேயும் நல்ல நண்பர்களாக உள்ளனர். இதனைப் பயன்படுத்தி தனது சில படங்களில் ஆர்யாவைச் செல்லமாக கலாய்த்துள்ளார் நடிகர் சந்தானம்.

இந்நிலையில், சமீபத்தில் சந்தானம் மற்றும் ஆஷ்னா சாவேரி இணைந்து நடிக்கும் 'இனிமே இப்படிதான்' படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது. அதற்கு அருகிலேயே ஆர்யாவின் யட்சன் படப்பிடிப்பு நடை பெற்றது.

நண்பேண்டா....

நண்பேண்டா....

அருகில் சந்தானத்தின் படப்பிடிப்பு நடப்பது ஆர்யாவிற்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக தனது நண்பேண்டாவைக் கலாய்க்கும் முடிவுடன் ஆர்யா அங்கு சென்றுள்ளார்.

டான்ஸ் மாஸ்டர்...

டான்ஸ் மாஸ்டர்...

ஆர்யா சென்ற போது, நடனக் காட்சிக்கான பயிற்சியில் சந்தானம் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார். முதலில் அதை வேடிக்கைப் பார்த்த ஆர்யா, பின்னர் தானே சந்தானத்திற்கு நடனம் கற்றுத் தருவதாக களத்தில் இறங்கியுள்ளார்.

திரும்பத் திரும்ப...

திரும்பத் திரும்ப...

தொடர்ந்து சந்தானத்தின் நடனத்தில் திருப்தி அடையாமல், திரும்பத் திரும்ப ஆடச் சொல்லி இருக்கிறார் ஆர்யா. முதலில் உண்மையாகவே அக்கறையில் தான் ஆர்யா நடனம் சொல்லித் தருகிறார் என நம்பிக் கொண்டிருந்த சந்தானத்திற்கு, நேரம் செல்ல செல்லத் தான் உண்மை புரிந்திருக்கிறது.

ப்ளீஸ், விட்டுடு மச்சி...

ப்ளீஸ், விட்டுடு மச்சி...

மீண்டும் மீண்டும் ஆடியதில் டயர்டாகிப் போன சந்தானம், 'நீ உண்மையிலேயே நல்ல டான்சர் தான் நான் ஒத்துக்கறேன். ப்ளீஸ் என்னை விட்டு விடு' என கெஞ்சினார். அதன் பின்னர் தான் சந்தானத்திற்கு டான்ஸ் சொல்லித் தருவதை நிறுத்தினாராம் ஆர்யா.

பழிக்குப் பழி...

பழிக்குப் பழி...

இந்த சம்பவத்தால் படப்பிடிப்பு தளமே கலகலப்பாக மாறியது. திரையில் ஆர்யாவை கலாய்த்தற்கு பழி வாங்கும் முயற்சியாகத் தான் அவர், சந்தானத்தை களைப்படையும் வரை ஆட வைத்ததாக படப்பிடிப்பில் இருந்தவர்கள் பேசிக் கொண்டனர்.

English summary
Actor Arya, a close friend of actor Santhanam, never misses out on an opportunity to pull his friend's leg.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil