»   »  'கடம்பன்' ஆர்யாவுக்கு கைகொடுக்குமா?

'கடம்பன்' ஆர்யாவுக்கு கைகொடுக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்யா நடிக்கும் புதிய படத்திற்கு கடம்பன் என்று பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபகாலமாக தான் நடித்த படங்கள் வரிசையாகத் தோல்வியைத் தழுவுவதால், அடுத்து ஒரு வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஆர்யாவுக்கு ஏற்பட்டுள்ளது.

அடுத்ததாக 'மஞ்சப்பை' ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவிருக்கிறார். ஆர்யா நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்க, யுவன் இசையமைக்கவிருக்கிறார்.

Arya Next Movie Title

இப்படத்தில் காடுகளில் வாழும் பழங்குடி இனத்தவராக ஆர்யா நடிப்பதால், ஜிம்மே கதியாகக் கிடந்து உடலை ஏகத்திற்கும் ஏற்றி வைத்திருக்கிறார்.

இந்நிலையில் கடம்பன் என இப்படத்துக்கு பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் குறித்த முழுமையான தகவல்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடம்பன் ஆர்யாவுக்கு கைகொடுக்குமா?...பார்க்கலாம்.

English summary
Sources Said Arya Next Movie Titled by Kadamban.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil