»   »  'தனிக்காட்டு ராஜா'வாக மாறும் ஆர்யா

'தனிக்காட்டு ராஜா'வாக மாறும் ஆர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மஞ்சப்பை ராகவன் இயக்கத்தில், ஆர்யா நடிக்கவிருக்கும் படத்திற்கு, தனிக்காட்டு ராஜா என்று பெயரிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜா ராணி படத்திற்குப் பின் சொல்லிக் கொள்ளும் ஹிட் படங்கள் எதையும் கொடுக்காததால் ஆர்யாவின் மார்க்கெட்டில் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது.

Arya Next Title Thanikaatu Raja

இதனால் கனமான வேடங்களைத் தேர்வு செய்து நடிக்க ஆர்யா ஆர்வம் முடிவு செய்திருக்கிறார். சமீபத்தில் மஞ்சப்பை புகழ் ராகவன் சொன்ன கதையால் கவரப்பட்ட ஆர்யா உடனே தனது கால்ஷீட்டை கொடுத்து விட்டாராம்.

கதைப்படி இதில் ஆர்யா பழங்குடி இனத்தவராக நடிக்கவிருக்கிறார். மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அதிரப்பள்ளி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு தனிக்காட்டு ராஜா என்று ரஜினியின் புகழ் வாய்ந்த தலைப்பை வைக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாம்.

ஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்கவுள்ள இப்படம் குறித்து, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தலைப்பை படக்குழு இறுதி செய்யும் பட்சத்தில் போக்கிரி ராஜா, தங்கமகன், வீரா வரிசையில் ஆர்யாவின் தனிக்காட்டு ராஜாவும் இணையும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Arya Next Team Up with Manja Pai Director Raghavan and He is Play a Tribal in this Film. Now Sources Said The Movie Has Been Titled as Thanikaatu Raja.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil