விவேக்கின் ஆசையை நிறைவேற்றிய ஆர்யா... நெகிழவைத்த தரமான சம்பவம்!

சென்னை : நடிகர் ஆர்யா விவேக்கிற்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி உள்ளதாக கூறியுள்ளார்.

Recommended Video

பணம் மோசடி கேள்விக்கு பதிலளிக்காத Arya | மரக்கன்று நட்ட ஆர்யா

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான இன்று மரக்கன்றுகளை நட்டுவைத்த ஆர்யா இவ்வாறு கூறினார்.

அதே போல விவேக்கின் நினைவாக ஆண்டு தோறும் மரக்கன்றுகளை நட உள்ளதாவும் கூறினார்.

அப்துல் கலாமின் பிறந்தநாள்

அப்துல் கலாமின் பிறந்தநாள்

முன்னாள் குடியரசுத் தலைவரும் இளைஞர்களின் எழுச்சி நாயகனுமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 90வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு மரம் நடுதல் உட்பட பல்வேறு சமூக நலத்திட்டப் பணிகளில் இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகள் எனப் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.

மரியாதைக்குரியவர்

மரியாதைக்குரியவர்

நடிகர் விவேக் அப்துல் கலாம் மீது மிகுந்த அன்பு கொண்டவர், அவரின் விருப்பப்படியே மரக்கன்றுகளை நடுவதை தன் வாழ்க்கையில் ஒரு கடமையாக செய்து வந்தார் விவேக்.

மரக்கன்றுகளை நட்டார்

மரக்கன்றுகளை நட்டார்

இந்நிலையில் நடிகர் ஆர்யா அகில இந்திய ரசிகர் மன்றம் சார்பாக இன்று செம்மொழிப் பூங்காவில் இரண்டு மரக்கன்றுகளை நட்டார். மரக்கன்று நட்ட பின்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆர்யா, நடிகர் விவேக் அப்துல் கலாம் பிறந்த நாள் அன்று மரக்கன்று நட கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைத்து இருந்தார்.

வாக்குறுதியை நிறைவேற்றினேன்

வாக்குறுதியை நிறைவேற்றினேன்

நடிகர் விவேக் இல்லாதது மிகவும் வருத்தமாக உள்ளது. இருப்பினும், அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாளன்று நான் மரம் நடுவேன் என மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தேன். அந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றி உள்ளேன் என்றார்.

விவேக்கின் நினைவாக

விவேக்கின் நினைவாக

அதே போல விவேக்கின் நினைவாக ஆண்டு தோறும் மரக்கன்றுகளை நட உள்ளதாவும் ஆர்யா கூறினார். அதேபோல, அப்துல் கலாம் அவர்களின் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் மரக்கன்று நடுமாறு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

விவேக் கடைசியாக

விவேக் கடைசியாக

விவேக் கடைசியாக, சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 3 திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, யோகிபாபு, ஆண்ட்ரியான என முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X