ஆர்யா தன் மகளுக்கு என்ன பெயர் வைத்துள்ளார் தெரியுமா?

சென்னை : கோலிவுட்டின் புகழ்பெற்ற நட்சத்திர தம்பதிகளில் ஒருவர் ஆர்யா - சாயிஷா. 2019 ம் ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜுலை மாதம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

தனது மகள் பற்றிய எந்த தகவலையும் இதுவரை வெளியிடாமல் இருந்த ஆர்யா, நேற்று மகள்கள் தினத்தை முன்னிட்டு தனது செல்ல மகளின் பெயரை வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் வாழ்த்துடன் வரவேற்றுள்ளனர்.

மகள் பெயரை வெளியிட்ட ஆர்யா

மகள் பெயரை வெளியிட்ட ஆர்யா

ஆர்யா தனது மகளுக்கு ஆரியானா என பெயரிட்டுள்ளாராம். இது பற்றி அவர் தனது சோஷியல் மீடியா பதிவில், நான் தந்தையாகி இரண்டு மாதங்கள் ஆகிய விட்டன என லவ் எமோஜிகளுடன் குறிப்பிட்டிருந்தார். அதோடு ஹேப்பி டாட்டர்ஸ் டே ஆரியானா என குறிப்பிட்டுள்ளார்.

ராசியான மகள்

ராசியான மகள்

தனது மகள் பிறந்த பிறகு தான் தனக்கு ராசி என கூறி வருகிறார் ஆர்யா. தனது திரையுலக பயணத்தில் முதல் பிளாக்பஸ்டர் ஹிட் படமான சார்பட்டா பரம்பரை ரிலீசானது. பா.ரஞ்சித் இயக்கிய இந்த படம் மிகப் பெரிய பாராட்டை பெற்றது. அதைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடித்த அரண்மனை 3 படம் அக்டோபர் 14 ம் தேதி ஆயுத பூஜைக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இதில் யோகிபாபு, ஆண்டிரியா, ராஷி கன்னா, சாக்ஷி அகர்வால் போன்றோர் நடித்துள்ளனர்.

அரண்மனை 3 ரிலீஸ் தேதி

அரண்மனை 3 ரிலீஸ் தேதி

அரண்மனை 3 படம் பல மாதங்களுக்கு முன்பே முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் கொரோனா, தியேட்டர்கள் மூடல் போன்ற காரணங்களால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் தாமதமாகி வந்தது. மகள் பிறந்த பிறகு தான் அரண்மனை 3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆர்யா கூறி வருகிறார்.

எனிமியும் ரெடி

எனிமியும் ரெடி

இதைத் தொடர்ந்து ஆர்யா வில்லனாக நடித்துள்ள எனிமி படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள இந்த படத்தில் முதல் முறையாக ஆர்யா வில்லன் ரோலில் நடித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.

ஃபோட்டோ வெளியிட்ட பிரபலங்கள்

ஃபோட்டோ வெளியிட்ட பிரபலங்கள்

மகள்கள் தினத்தை முன்னிட்டு சினேகா, நிவின் பாலி, ஹர்பஜன் சிங், அக்ஷய் குமார், கனி திரு, தொகுப்பாளர் அர்ச்சனா, சரத்குமார், ஆரி, குஷ்பு உள்ளிட்ட சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களின் மகள்களின் ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, தங்களின் உணர்பூர்வமான அன்பை வெளிப்படுத்தும் விதமாக கேப்ஷன் பதிவிட்டிருந்தனர்.

வைரலாகும் பதிவு

வைரலாகும் பதிவு

இந்த வரிசையில் ஆர்யாவும் தனது மகளின் பெயரை வெளியிட்டு, மகள் மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஆர்யாவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X