»   »  ஆர்யா நடிக்கும் படம் அபோகலிப்டோ கதையா?

ஆர்யா நடிக்கும் படம் அபோகலிப்டோ கதையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மஞ்சப்பை ராகவன் இயக்கத்தில் ஆர்யா, கேத்தரின் தெரசா நடிக்கும் படம் முழுக்க முழுக்க காட்டுக்குள்ளேயே உருவாகிறது.

இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஜீவா (நடிகர் ஜீவாவேதான்) தயாரிக்கிறார்.

Arya's new movie story line

கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் இந்த படத்துக்காக மலைவாழ் மக்களின் வீடுகள் செட் போடப்பட்டு படப்பிடிப்பும் முடிந்தது. சென்னையில் வில்லன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அடுத்து க்ளைமாக்ஸ் காட்சி எடுப்பதற்காக தாய்லாந்து செல்ல உள்ளனர்.

மலைவாழ் காட்டுவாசியாக ஆர்யா நடிக்கும் இந்த படத்தின் கதை அபோகலிப்டோ படம் போன்ற கதையாம்.

ஒரு மலையையும் அங்கிருக்கும் நில வளத்தையும் அழிக்க துடிக்கிறது ஒரு சிமெண்ட் ஆலை கம்பெனி. அதனை எதிர்த்து போராடி தன் மக்களை ஆர்யா எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதையாம்.

English summary
Sources say that Arya's new movie's story line is almost same like Apocalypto .

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil