Just In
- 8 min ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 34 min ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
- 1 hr ago
கல்லடி வரும்னு நினைச்சேன்.. ஆனா அன்பு அடிதான் வந்திருக்கு.. பிக்பாஸ் குறித்து மனம் திறந்த பாலாஜி!
- 1 hr ago
பின்னாடி என்னம்மா பேலன்ஸ் பண்றாங்க.. வேற லெவல் ஸ்குவாட் போடும் ரகுல் ப்ரீத் சிங்.. வைரல் வீடியோ!
Don't Miss!
- News
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 568 பேருக்கு தொற்று.. 689 பேர் டிஸ்சார்ஜ்.. 8 பேர் உயிரிழப்பு..!
- Finance
மாத சம்பளக்காரர்களுக்கு ஜாக்பாட்.. வரி பலகை எண்ணிக்கை குறைக்க அதிக வாய்ப்பு..!
- Automobiles
நாடு திரும்பிய கையோடு சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... அவர் யார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!
- Sports
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்துல தடையெல்லாத்தையும் கடந்துருக்காரு... சிராஜ் குறித்து கோச் பெருமிதம்
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சல்பேட்டா படத்திற்காக ஆர்யாவின் வெறித்தனமான பயிற்சி...மிரண்டுப்போன பயிற்சியாளர் !
சென்னை : இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் பழைய வடசென்னையின் பிரபலமான விளையாட்டாக இருந்துவந்த குத்துச் சண்டையை மையமாக கொண்டு சல்பேட்டா திரைப்படம் உருவாகி வருகிறது.
இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்து வர, கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
உலக மகா நடிப்புடா சாமி.. நேத்து அப்படி பேசிட்டு இன்னைக்கு மன்னிப்பு கேட்கும் பாலா.. நம்பலாமா!
முழுக்க முழுக்க குத்துச்சண்டை நிறைந்த திரைப்படம் என்பதால் நடிகர் ஆர்யா அதற்காக தீவிரமான குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீடியோவை வெளியிட்டதை அடுத்து இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.

குத்துச்சண்டை வீரர்
கலகலப்பான திரைப்படங்களில் காமெடி நடிகர்களுடன் இணைந்து கலக்கி பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த நடிகர் ஆர்யா இப்பொழுது இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துவரும் சார்பட்டா திரைப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி வருகிறார்.

பழைய வடசென்னை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா, கபாலி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பா ரஞ்சித் இப்பொழுது இயக்கி வரும் சல்பேட்டா திரைப்படம் பழைய வடசென்னையின் குத்துச்சண்டையை மையமாகக்கொண்டு உருவாகி வரும் திரைப்படம் என சொல்லப்படுகிறது.

கமல்ஹாசன் பாராட்டியது
மெட்ராஸ் திரைப்படத்தில் வடசென்னையின் கதையை கையில் எடுத்து வெற்றி கண்ட இயக்குனர் பா ரஞ்சித், இப்பொழுது இரண்டாம் முறையாக வடசென்னையை மையப்படுத்தி எடுக்கும் இத்திரைப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அதிலும் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் சார்பட்டா திரைப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

உடம்பை தாறுமாறாக ஏற்றி
இந்த கதாபாத்திரத்திற்காக நடிகர் ஆர்யா எடுத்துக்கொண்ட மெனக்கெடல் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாது அந்த அளவிற்கு தனது உடலை கடுமையாக வருத்திக்கொண்டு உண்மையான குத்துச்சண்டை வீரர்களைப் போல உடம்பை தாறுமாறாக ஏற்றியுள்ள ஆர்யாவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வாய் பிளக்க வைத்தது.

வெறித்தனமான சண்டை
சல்பேட்டா திரைப்படத்தை பற்றிய பல அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில் வரும் 2021 ஆம் ஆண்டு திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இப்பொழுது ஆர்யா தீவிரமான குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பயிற்சியாளரே அசந்து போகும் அளவிற்கு சுழன்று சுழன்று அடிக்க பார்க்கும் அனைவரையும் மிரட்டி வரும் ஆர்யாவின் இந்த வெறித்தனமான சண்டைப் பயிற்சி வீடியோ இப்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.