»   »  தோல்வி நாயகன் ஆர்யாவின் புதிய படத்தைத் தயாரிக்கும் ஜீவா... நட்புக்காக

தோல்வி நாயகன் ஆர்யாவின் புதிய படத்தைத் தயாரிக்கும் ஜீவா... நட்புக்காக

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ஆர்யாவின் அடுத்த படத்தை தனது சூப்பர் குட் பிலிம்ஸ்க்காக தயாரித்து அவரைக் கைதூக்கிவிட முன்வந்திருக்கிறார் ஜீவா.

திரையுலகில் ஆர்யா - ஜீவாவிற்கிடையே நல்லதொரு நட்பு இருக்கிறது. ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி படத்தில் ஆர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, பதிலுக்கு அவரின் பாஸ் என்கின்ற பாஸ்கரன் மற்றும் இஞ்சி இடுப்பழகி போன்ற படங்களில் நடித்துக் கொடுத்தார் ஜீவா.

இந்நிலையில் நட்புக்காக ஆர்யாவின் புதிய படத்தைத் தயாரிக்க முன்வந்திருக்கிறார் ஜீவா.

ஆர்யா

ஆர்யா

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ஆர்யா. உள்ளம் கேட்குமே படம்தான் ஆர்யாவின் அறிமுகப் படம் என்றாலும் அறிந்தும் அறியாமலும் முந்திக் கொண்டது. தொடர்ந்து பட்டியல், கலாபக்காதலன், நான் கடவுள் ஆகிய படங்களில் நடித்தார். இதில் நான் கடவுள் திரைப்படம் ஆர்யாவின் நடிப்பிற்கு ஒரு சான்றாக அமைந்தது.

மதராசப்பட்டினம்

மதராசப்பட்டினம்

ஆர்யா நடித்த மதராசப்பட்டினம், பாஸ் என்கின்ற பாஸ்கரன் ஆகிய படங்கள் ஆர்யாவை வசூல் நாயகன் அந்தஸ்திற்கு அழைத்துச் சென்றன. அதற்குப் பின்னர் வெளிவந்த படங்கள் காலை வார அந்த நேரத்தில் ராஜா ராணி வந்து ஒரு திருப்பத்தைக் கொடுத்தது.

தடுமாறும் ஆர்யா

தடுமாறும் ஆர்யா

மீகாமன் தொடங்கி தொடர்ந்து வெளியான புறம்போக்கு என்கின்ற பொதுவுடைமை, யட்சன், வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க மற்றும் கடைசியாக வெளியான இஞ்சி இடுப்பழகி என்று வரிசையாக 5 தோல்விப் படங்களை ஆர்யா கொடுத்திருக்கிறார்.தற்போது இவரின் கையில் பெங்களூர் டேஸ் படத்தின் ரீமேக் மட்டுமே இருக்கிறது.

பிளேபாய் வேடங்கள்

பிளேபாய் வேடங்கள்

வரிசையான தோல்விகளால் அதிந்து போன ஆர்யா தற்போது சுதாரித்துக்கொண்டு இனி பிளேபாய் மற்றும் நகைச்சுவை வேடங்களை ஏற்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். மேலும் தன்னைத் தேடிவரும் இயக்குநர்களிடம் கனமான வேடங்கள் இருந்தால் கதை சொல்லும்படி வேண்டுகோள் விடுத்து வருகிறாராம்.

ஆர்யா - ஜீவா

ஆர்யா - ஜீவா

தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை ஆர்யா - ஜீவாவிற்கிடையே நல்லதொரு நட்பு இருக்கிறது. ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி படத்தில் ஆர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, பதிலுக்கு அவரின் பாஸ் என்கின்ற பாஸ்கரன் மற்றும் இஞ்சி இடுப்பழகி போன்ற படங்களில் நடித்துக் கொடுத்தார் ஜீவா.
இந்நிலையில் நட்புக்காக ஆர்யாவின் புதிய படத்தை தனது சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்க முன்வந்திருக்கிறார் ஜீவா.

மஞ்சப்பை இயக்குநர்

மஞ்சப்பை இயக்குநர்

ஆர்யாவின் புதிய படத்தை விமல், ராஜ்கிரண் இணைந்து நடித்த மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இயக்கவிருக்கிறாராம். விரைவில் கதாநாயகி மற்றும் தொழிநுட்பக் கலைஞர்கள் ஆகியவற்றை முடிவு செய்த பின்னர், படத்தைப் பற்றிய முறையான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதே நேரத்தில் ராகவன் மஞ்சப்பை படத்தின் கன்னட ரீமேக்கை வெளியிடும் முயற்சிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

English summary
Arya Team Up with Jiiva for his Next Movie, Directed by Manja Pai Fame Ragavan. The Official Announcement of this film will be Released Soon.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil