»   »  'டிமாண்டி காலனி' அஜய் ஞானமுத்துவுடன் கைகோர்க்கும் அதர்வா!

'டிமாண்டி காலனி' அஜய் ஞானமுத்துவுடன் கைகோர்க்கும் அதர்வா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அதர்வா அடுத்ததாக டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பெண் பேய்களை மட்டும் பார்த்துப் பயந்து கொண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் ஆண் பேய்களை அறிமுகம் செய்த பெருமைக்குரியவர் அஜய் ஞானமுத்து.

ஆழ்வார்பேட்டை பகுதியில் இருக்கும் டிமாண்டி காலனி என்ற நிஜ இடத்தை எடுத்துக் கொண்டு அதில் தன் கற்பனையைக் கலந்து கதை சொல்லியிருந்தார்.

Atharva Team up with Ajay Gnanamuthu

அஜய் ஞானமுத்துவின் தேர்ந்த திரைக்கதையும், அருள்நிதியின் நடிப்பும் இப்படத்தை வெற்றிப் படவரிசையில் சுலபமாக இணையச் செய்தன.

இப்படம் வெளியாகி பல மாதங்கள் கடந்த பின்னும் அஜய் ஞானமுத்துவின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகமலேயே இருந்தது.

இந்நிலையில் அதர்வாவை வைத்து அஜய் தன்னுடைய அடுத்தப் படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.மேலும் இதில் புதுமுக நடிகையை நடிக்க வைக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.

அதர்வா தற்போது பாணா காத்தாடி புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் செம போத ஆகாதா படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இதற்குப்பின் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Atharva Team up with Demonte Colony fame Ajay Gnanamuthu for his next.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil