»   »  'டேக் ஆஃப்' ஆகுமா விக்ரம்- ஆனந்த் சங்கர் படம்?

'டேக் ஆஃப்' ஆகுமா விக்ரம்- ஆனந்த் சங்கர் படம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

10 எண்றதுக்குள்ள படத்துக்கு கிடைத்த அடி, சேதுவுக்குப் பிந்தைய விக்ரமின் திரையுலக வாழ்க்கையில் மிக மோசமானது. இந்தத் தோல்வி, அவரது எதிர்கால படங்களின் தலைஎழுத்தையே மாற்றிவிட்டன.

அரிமா நம்பி படம் தந்த ஆனந்த் சங்கர் அடுத்து விக்ரமை வைத்து புதிய படம் இயக்குவதாக இருந்தார். இந்தப் படத்தை முதலில் கலைப்புலி தாணு தயாரிப்பதாக இருந்தார். பின்னர் படம் அயங்கரன் நிறுவனத்துக்குக் கைமாறியது.

Ayngaran backed out from Vikram - Anand Shankar project?

இப்போது அய்ங்கரன் நிறுவனமும் தன் முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டதாக தகவல் பரவியுள்ளது.

இந்தப் படம் ஒரு சயின்ஸ் ஆக்ஷன் த்ரில்லராம். விக்ரமுக்கு இரட்டை வேடம். எந்திரன் மாதிரி கதை என்பதால் விக்ரம் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறாராம். ஆனால் தயாரிப்பாளர்கள்தான் சரியாக அமையவில்லை.

இப்போது வேறு தயாரிப்பாளர்களைத் தேடி வருகிறார்களாம் விக்ரமும் இயக்குநர் ஆனந்த் சங்கரும்.

English summary
Sources says that Ayngaran International has backed out from Vikram - Anand Shankar project.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil