»   »  'போலீஸ் யூனிபார்ம் போட்டதுமே யாராச்சும் கிடைப்பாங்களான்னு கை துறுதுறுன்னு இருக்கும்!' - பாக்யராஜ்

'போலீஸ் யூனிபார்ம் போட்டதுமே யாராச்சும் கிடைப்பாங்களான்னு கை துறுதுறுன்னு இருக்கும்!' - பாக்யராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அய்யனார் வீதி என்றொரு படம். இயக்குநர் கே பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

இயக்குநர் பாக்யராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நீதியரசர் முரளிதரன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் பொன்வண்ணன், இயக்குநர் பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Ayyanar Veedhi audio launch: K Bagyaraj's comment on police

ஜிப்சி என் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசையை தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு வெளியிட தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் பெற்றுக் கொண்டார்.

விழாவில் கே பாக்யராஜ் பேசியது:

நீதியரசர் என்றதுமே ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. சில போஸ்டுக்கு சிலபேர் வந்து உட்கார்ந்ததுமே ஒரு தனித்தன்மையக் குடுக்கும். நாங்கெல்லாம் விளையாட்டா சொல்லிப்போம். போலீஸ்காரர் போலீஸ் யூனிபார்ம் போட்டதுமே கை துருதுருன்னு இருக்கும். யாராவது கெடைப்பாங்களான்னு பாத்துகிட்டிருப்பாங்க. இதுக்குத்தான் புரட்சித் தலைவர் பாட்டுல சொல்லியிருக்கார் பதவி வரும்போது பணிவு வரவேண்டும். துணிவு வரவேண்டும் என்று... அப்படி பதவி வரும்போது பணிவோடு, துணிவோடு சிலர்தான் இருப்பார்கள்.

Ayyanar Veedhi audio launch: K Bagyaraj's comment on police

எங்கண்ணன் மோட்டார் சைக்கிள்ள போகும்போது 10 வயசு பையன் குறுக்க வந்து விபத்தாகிப் போச்சி. அதுல அந்த பையன் இறந்து போயிட்டான். அந்த வழக்கு கோர்ட்டுக்கு வந்தப்போ நானும்போய் கோர்ட்ல நின்னேன். பேர் சொல்லி கூப்பிட்டப்போ கூண்டுல போய் ஏறப்போனேன். என்னை பார்த்த நீதிபதி 'நீ என்ன பண்றேன்னு கேட்டார். நான் காலேஜ் படிக்கிற மாணவன்னு சொன்னேன்.' உடனே அவர் கூண்டுல ஏறவேணாம்... இப்படியே நின்னு பேசுன்னு' சொல்லிட்டார். குற்றவாளின்னு சொன்னாங்கன்னா கூண்டுல வைச்சித்தான் கேள்வி கேக்கணும். ஆனா அவர் கூண்டுல ஏத்துல.. என்னன்னா ஒரு கல்லூரி மாணவன்... ரோட்ல ஆக்சிடென்ட் ஆகிப்போச்சி.. இதுக்காக கூண்டுல நிறுத்தினா வாழ்நாள் முழுக்க கூண்டுல நின்னோமேன்னு ஒரு குற்றஉணர்வு வரக்கூடாது... இது ஆக்சிடென்ட்தான் தெரிஞ்சி பண்றதில்லைன்னுன்னு சொல்லி கூண்டுல ஏத்தாம விசாரிச்சார். அதை அங்க இருந்தவங்க ஆச்சர்யமா பாத்து வக்கீல் எல்லாரும் கை தட்டினாங்க. இது அந்த ஜட்ஜுடைய அந்த அணுகுமுறை. சில சம்பவங்கள் அவர்களின் கேரக்டர்கள் மனசுல பசுமரத்தாணிபோல பதிஞ்சி போயிடும். எனக்கு இது நடந்து கிட்டத்தட்ட 40 வருஷத்துக்கு மேல ஆனாலும் இன்னும் நினைவில் இருக்கு. இந்த விழாவில் என் பக்கத்துல நீதியரசர் வந்து உட்கார்ந்ததும் இந்த நினைவு வந்தது.

இசையில் நான் ஆக்சிடென்ட்டா நுழைஞ்சி நான்பட்ட அவஸ்தை இருக்கே... யுகே முரளி ரொம்ப வருஷமா போராடி வந்தார்னு சொன்னார்கள். நான் சொன்னேன் இந்த படம் வெளியானதும் பல படங்கள் வரும்னு சொன்னேன். ஆனா பேசும்போது ஆகாஷ் அவர் படங்களில் யுகே முரளிதான் இசை என்று சொன்னார். தொடர்ந்து இன்னும் பல படங்கள் வரும். நான் இசையமைப்பேன்னு யாருமே நம்பல. ஆனா, ஒரு படத்துக்கு புலமைப்பித்தன் வந்தார். ஹம் பண்ணதும் பேசாம இந்த பாட்டை நீயே பாடிடுன்னு சொன்னார். அதுக்கு அவர் சொன்ன காரணம், உனக்கு மியூசிக் போடவே தெரியாதுன்னு சொல்றாங்க. அதனால நீயே பாடிடுட்டு சொன்னார். அந்த பாட்டுதான் 'பச்சமலை சாமி வந்து...' பாட்டு. எனக்கு இசை நோட் எதுவும் தெரியாது. ஆனா, கத்துகிட்டிருக்கேன். கத்துக்கிறதுக்கு வயசு எதுவும் தேவையில்லை. எப்படியாவது இசை நோட் கத்துகிட்டு என் படத்துக்கு வாசிக்காம விடமாட்டேன்.

என்னிடம் யார் வந்து எதை சொன்னாலும் அதில் எனக்கு தோன்றிய கருத்துக்களை தயங்காமல் சொல்லிவிடுவேன். ஜிப்சி ராஜ்குமார் வந்து கதையை சொன்னதும் நடிக்கிறேன்னு சொன்னேன். என்கிட்ட கதையை சொல்லும்போது படம் 30 சதவீதம் எடுத்து முடிச்சிட்டோம்னு சொன்னாங்க. இளைஞர்களுக்கு இன்னும் நிறைய சீன் வையுங்கன்னு சொன்னேன். தயாரிப்பாளர் செந்தில் நடிச்சிருக்காருன்னதும் யோசிச்சேன். இப்ப பார்த்தா நல்லா டான்ஸ் ஆடியிருக்கார். எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் புரட்சித்தலைவர் பத்தி ஒரு பாடல் எழுதி இசையமைத்து இயக்குனர் பேரரசு ஒரு பாடலை வெளியிட்டிருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார்கள். சினிமாவுக்கு காசு போட்டிருந்தாலும் பொன்வண்ணன் சொன்னதுபோல பல குடும்பங்களுக்கு பணம் போட்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த காசை திரும்ப எடுக்க வேண்டும். இது எதுவும் வீண் போகாமல் திரும்ப கிடைக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்".

இவ்வாறு இயக்குநர் பாக்யராஜ் பேசினார்.

English summary
The audio of debutatnt director Jipsy Rajkumar's Ayyanar Veethi was launched by Kalaipuli Thanu and K Bagyaraj recently.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil