»   »  யாரும் வாழ்த்தாதீங்க: பிறந்தநாள் அன்று இறந்தநாள் பற்றி பேசிய ராம் கோபால் வர்மா

யாரும் வாழ்த்தாதீங்க: பிறந்தநாள் அன்று இறந்தநாள் பற்றி பேசிய ராம் கோபால் வர்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது பிறந்தநாள் அன்று இறந்தநாள் பற்றி பேசியுள்ளார்.

ஏப்ரல் 7ம் தேதி இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு 53 வயதானது. அவர் அன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடவில்லை. காரணம் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவருக்கு நம்பிக்கை இல்லை. மேலும் பிறந்தநநாள் அன்று அவர் தனது இறந்தநாள் பற்றி பேசியுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இறப்பு

நான் இறந்து நெடுங்காலம் ஆகிவிட்டது. நான் செய்த பாவங்களுக்கு நான் உயிர்பிக்கப்பட மாட்டேன் என நினைக்கிறேன். எனவே எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி நேரத்தை வீணாக்காதீர்கள்.

வாழ்த்துக்கள்

என் நலம் விரும்பிகளின் வாழ்த்துக்களால் என் பிறந்தநாள் சிறப்பாகிவிடப் போவதும் இல்லை என்னை வெறுப்பவர்களின் சாபத்தால் அது மோசமாகப் போவதும் இல்லை.

பிறந்தநாள்

போலி மற்றும் காரணமற்ற அன்பால் என் பிறந்தநாள் மிகவும் மகிழ்ச்சியற்ற பிறந்தநாளாக ஆக்கப்பட்டுள்ளது. நான் வெறுப்பையே விரும்புகிறேன் என்று ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

வீடியோ

நான் என் பிறந்தநாளில் இறந்தநாள் பற்றி பேசும் வீடியோ இதோ என்று கூறி அதற்கான லிங்க்கையைும் ட்விட்டரில் போட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.

English summary
Director Ram Gopal Varma has talked about his deathday on his birthday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil