»   »  36 வயதினிலே... தமன்னா, ராணாவுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய ‘பாகுபலி’!

36 வயதினிலே... தமன்னா, ராணாவுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய ‘பாகுபலி’!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் பாகுபலி படக்குழுவினருடன் தனது 36வது பிறந்தநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்.

கடந்த 2002-ஆம் ஆண்டு ஈஸ்வர் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான பிரபாஸ், அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். 2014-ஆம் ஆண்டில் பிரபுதேவாவின் இயக்கத்தில் 'ஆக்‌ஷன் ஜாக்‌ஷன்' என்ற பாலிவுட் படத்திலும் கவுரவத் தோற்றத்தில் நடித்தார்.

இந்நிலையில், ராஜமவுலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த பாகுபலி படம் பிரபாஸிற்கு உலகளவில் ரசிகர்களைப் பெற்றுத் தந்துள்ளது. அடுத்தாண்டு ரிலீசாகவுள்ள பாகுபலி இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

பாகுபலி-2...

பாகுபலி-2...

பாகுபலி இரண்டாம் பாகத்திற்காக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில், பிரபாஸ், ராணா, தமன்னா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

36வது பிறந்தநாள்...

36வது பிறந்தநாள்...

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று தனது 36வது பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரபாஸ். பாகுபலி படப்பிடிப்பு தளத்தில் ராணா, தமன்னா மற்றும் படக்குழுவினருடன் அவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

வாழ்த்து...

வாழ்த்து...

பிரபாஸுக்கு தெலுங்கு திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். நடிகை சமந்தா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் டிவிட்டர் வாயிலாகவும் தங்களது வாழ்த்துக்களைக் கூறினர்.

எக்ஸ்பிரஸ் ராஜா ...

எக்ஸ்பிரஸ் ராஜா ...

தமிழில் எங்கேயும், எப்போதும் படத்தில் நடித்திருந்த சர்வானந்த், தற்போது தெலுங்கில் எக்ஸ்பிரஸ் ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகரான இவர், தனது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் பிரபாஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் வாழ்த்து...

ரசிகர்களின் வாழ்த்து...

இதேபோல், ரசிகர்களும் சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக பாகுபலி நாயகனுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

English summary
Baahubali actor Prabhas, who turns a year older on Friday, celebrated his special day with friends Tamaanaah Bhatia and Rana Daggubati.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil