»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாபா படத்தை வாங்கி கடுமையாக நஷ்டப்பட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஓரளவு பணத்தை திரும்பக் கொடுத்தார்ரஜினி காந்த்.

ரஜினி பட வரலாற்றில் அதிக அளவில் பேசப்பட்ட, விமர்சிக்கப்பட்ட படம் பாபா. பெரும் தொகைக்கு இந்தப்படத்தை விற்றார் ரஜினி. வினியோகஸ்தர்களை ஒதுக்கிவிட்டு நேரடியாக தியேட்டர் உரிமையாளர்களுக்குவிற்றார்.

ஒவ்வொரு தியேட்டருக்கும் மிகப் பெரிய விலைக்கு படம் விற்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசி முதல்3 வாரத்துக்கு தியேட்டர்காரர்களே கட்டணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றஅனுமதியை வாங்கித் தந்தார்.

இதனால் வாயை மிக அகலமாகத் திறந்த தியேட்டர் உரிமையாளர்கள் மீட்டர் வட்டிக்கு பணம் வாங்கி பாபாபடத்தை எடுத்தனர். கட்டணத்தை ரூ. 200ல் ஆரம்பித்து ரூ. 1,500 வரை வைத்தனர்.

இதனால் ரஜினியின் ரசிகர்கள் பலர் இந்தப் படத்தைப் பார்க்கவே வட்டிக்கு பணம் வாங்க வேண்டி வந்தது.அப்படியும் ரசிகர்கள் முட்டிமோதி பார்த்தும் கூட படம் 2வது வாரத்தை கடக்க முடியவில்லை.

மக்கள் இந்தப் படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டவில்லை. படத்தில் கூறப்பட்டிருந்த மெசேஜ், ரஜினியை சாமிபோல காட்டியது, ரஜினியை வைத்து ஒரு ஞிதடூணா உருவாக்க முயல்வது போன்ற முயற்சியை மக்கள் ஏற்கவில்லை. மேலும் டாக்டர்ராமதாசின் விமர்சனம், பா.ம.கவினரின் அடிதடி ஆகியவையும் பாபாவை தியேட்டரை விட்டு ஓட வைத்தது.

இதனால் பல தியேட்டர் உரிமையாளர்கள் படப் பெட்டியை தூக்கிக் கொண்டு ரஜினி வீட்டுக்கு ஓடிவந்தனர்.

பெட்டியை வைத்துக் கொண்டு பணத்தைத் திருப்பித் தருமாறு கெஞ்சினர். ஆனால், இப்போதைக்கு ஏதும் செய்ய முடியாது என்றுவிரட்டிவிடப்பட்டனர். ஆனால், அனைத்து தியேட்டர்காரர்ளும் ஒன்றாக சேர்ந்து குரல் எழுப்பவே எதிர்கால பிரச்சனையை மனதில்கொண்டு பணத்தைத் திருப்பித் தர ரஜினி தரப்பில் ஒப்புக கொள்ளப்பட்டது.

சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி, பாபா படத்தை வாங்கி தலையில் துண்டு போட்டுக்கொண்ட தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து ஓரளவு பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டாராம்.

மதுரையைச் சேர்ந்த ஒரு தியேட்டர் உரிமையாளர் நம் நிருபரிடம் கூறுகையில், ரெட் படம் திரையிட்டதால்எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தினால் குடும்பமே என்னை விட்டுப் பிரிந்துவிட்டது. பின்னர் வந்த ஜெமினி எனதுகுடும்பத்தை ஒன்று சேர்த்தது. ஆனால், பாபாவினால் என் குடும்பம் மீண்டும் பிரியும் நிலை உருவாகிவிட்டதுஎன்றார்.

சுப்ரமணியம் என்ற வினியோகஸ்தர் கூறுகையில், எம்.ஜி.ஆர் அந்தக் காலத்தில் தனது படத்தினால் நஷ்டம்ஏற்பட்டால், உடனடியாக அடுத்த படத்தை எடுத்து வினியோகஸ்தர்களுக்கு இலவசமாகத் தருவார். இப்போதுஅப்படி இல்லை. கிடைத்தவரை சுருட்டும் மனப்பான்மை தான் இருக்கிறது. ஏதோ ரஜினி காலம் தாழ்த்தியாவதுபணத்தைத் தந்துவிட்டார் என்றார்.

ரஜினி திருப்பிக் கொடுத்த தொகை பல கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள். ரஜினி காந்த்தின் இந்தநடவடிக்கையை நடிகர் கமல் விமர்சனம் செய்துள்ளதாகத் தெரிகிறது.

ரஜினியின் நடவடிக்கை திரைத் துறையில் மோசமான முன்னுதாரணத்தைத் தந்து விடும் என்று அவர் சிலதயாரப்பாளர்களிடம் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார்.

பணத்தைத் திருப்பித் தருவதற்குப் பதிலாக, இன்னொரு படத்தை எடுத்து அதை இலவசமாக விற்றிருக்கலாம் என்றுஅவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஓரளவு தான் பணம் திரும்பக் கிடைத்துள்ளது. இதனால் தியேட்டர்காரர்கள் அடைந்த நஷ்டத்தை முழுமையாக ஈடுகட்டிவிட முடியாது.இருந்தாலும் தியேட்டர்களை மூடுவதைத் தவிர்த்துவிட முடியும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil