»   »  'பாகுபலி' பிரபாஸ் வீட்டு வாசலில் காத்துக் கிடக்கும் இயக்குனர்கள், விளம்பரதாரர்கள்

'பாகுபலி' பிரபாஸ் வீட்டு வாசலில் காத்துக் கிடக்கும் இயக்குனர்கள், விளம்பரதாரர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி படத்தின் மூலம் ஒரே இரவில் பிரபாஸ் இந்தியாவின் மெகா ஸ்டார் ஆகிவிட்டார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வந்தவர் பிரபாஸ். இந்நிலையில் தான் அவர் ராஜமவுலியின் இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதுடன் ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ளவர்களை அவரை திரும்பிப் பார்க்க வைத்தது.

இத்தனை நாட்களாக தெலுங்கு நடிகராக மட்டுமே இருந்த பிரபாஸ் ஒரே இரவில் அனைத்து மொழி திரையுலகினருக்கும் பிடித்த ஹீரோவாக ஆகிவிட்டார்.

பாலிவுட்

பாலிவுட்

பிரமாண்டத்திற்கு பெயர் போன பாலிவுட் பாகுபலி படத்தையும், பிரபாஸின் நடிப்பையும் பார்த்து மிரண்டு போயுள்ளது. பாலிவுட் இயக்குனர்கள் பிரபாஸை தங்கள் படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

பி.ஆர். நிறுவனம்

பி.ஆர். நிறுவனம்

பாலிவுட் பழக்கம் இல்லாததால் வரும் வாய்ப்புகளை கவனிக்க பிரபாஸ் பிரபல பி.ஆர். நிறுவனத்தை நாடியுள்ளாராம். இனி பிரபாஸை பார்க்க வேண்டும் என்றால் அவர்களை தான் முதலில் அணுக வேண்டும்.

விளம்பரங்கள்

விளம்பரங்கள்

பல பிரபல பிராண்டுகள் பிரபாஸை தங்களின் விளம்பரப் படங்களில் நடிக்க வைக்க அவர் வீட்டு வாசலில் காத்துக் கிடக்கின்றன. அதுவும் பிரபாஸ் எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாராக உள்ளன.

இந்தி

இந்தி

பிரபாஸ் இதுவரை எந்த இந்தி படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை. ஆனால் கதை கேட்டுக் கொண்டிருக்கிறார். கதை பிடித்தால் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாராம்.

பாகுபலி 2

பாகுபலி 2

பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. இந்த படத்தை முடித்த பிறகு பிரபாஸ் ரன் ராஜா ரன் பட இயக்குனர் சுஜீத்தின் இயக்கத்தில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

English summary
Telugu actor Prabhas has become a national sensation overnight after Bahubali became a super duper hit.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil