»   »  பீப் பாடல்: வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, சிம்புவின் பாஸ்போர்ட்டை முடக்கியதா காவல்துறை?

பீப் பாடல்: வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, சிம்புவின் பாஸ்போர்ட்டை முடக்கியதா காவல்துறை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிம்பு வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாமல் இருக்க அவரது பாஸ்போர்ட்டை முடக்கவும், முக்கிய விமான நிலையங்களை கண்காணிக்கவும் போலீசார் திட்டமிட்டு இருக்கின்றனர்.

பீப் பாடல் விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் சிம்புவை கைதுசெய்ய 3 க்கும் மேற்பட்ட தனிப்படைகளை காவல் துறையினர் அமைத்து இருக்கின்றனர்.

Beep Song: Simbu's Passport lockup?

மேலும் சிம்புவை அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் தேடும் பணியையும் போலீசார் துரிதப்படுத்தி வருகின்றனர். சிம்பு எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது.

இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக சிம்பு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, முக்கிய விமான நிலையங்களில் கண்காணிப்புப் பகுதியை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

மேலும் அவரது பாஸ்போர்ட்டை முடக்கும் பணிகளிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது தீவிரமாக இறங்கி உள்ளனராம். இதனால் சிம்பு எந்த வழியிலும் வெளியுலகத்தை தொடர்பு கொள்ள முடியாத சூழல் தற்போது ஏற்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கின் காரணமாக சிம்புவின் படங்கள் தற்போது முடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் சிம்புவின் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அவருக்கு சம்மன்களை அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Beep Song Controversy: The Cyber Crime Police Freeze Simbu's Passport, Major Airports are Planning to Monitor the Police.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil