என்னது...சூர்யாவின் அடுத்த படம் வாடிவாசல் இல்லையா ?

சென்னை : சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் வேலைகள் கிட்டதட்ட முடியும் நிலைக்கு வந்து விட்டது. இந்த படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் சமீபத்தில் தான் நிறைவடைந்தது.

Recommended Video

Jothika Joins INSTA | புது Record Create செய்த Jo | Welcome Pondati ♥️

காரைக்குடியில் 51 நாட்களாக நடந்து வந்த முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் சென்னை ஈசிஆர்.,ல் நடத்தப்பட உள்ளது.

அக்டோபரில் வாடிவாசல்

அக்டோபரில் வாடிவாசல்

எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்த பிறகு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. வெற்றிமாறனும் தற்போது சூரி ஹீரோவாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இருவரும் தாங்கள் கமிட்டாகி உள்ள படங்களை முடித்த பிறகு அக்டோபர் மாதம் துவக்க உள்ளதாக கூறப்பட்டது.

சூர்யாவின் காளை பயிற்சி

சூர்யாவின் காளை பயிற்சி

வாடிவாசல் படம் ஜல்லிக்கட்டை மையமாக கொண்ட படம் என்பதால் தனது கேரக்டருக்கு செட்டாக வேண்டும் என்பதற்காக காளைகளை முறையாக கையாள்வதற்காக சூர்யா சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார். இதனால் இந்த படம் எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

 தள்ளி போகிறதா வாடிவாசல்

தள்ளி போகிறதா வாடிவாசல்

ஆனால் சூர்யா ஏற்கனவே பல படங்களில் கமிட்டாகி இருப்பதால் வாடிவாசல் படத்தின் ஷுட்டிங் தள்ளி போகிறதாம். எதற்கும் துணிந்தவன் படத்துடன், ஜெய் பீம் உள்ளிட்ட சில படங்களில் சூர்யா நடித்து வருகிறார்.

இது தான் காரணமா

இது தான் காரணமா

லேட்டஸ்ட் தகவலின் படி, எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்த பிறகு அயலான் டைரக்டர் ரவிக்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளாராம். அதோடு வாடிவாசல் படத்தின் ப்ரீ ப்ரோடக்ஷன் வேலைகளை முடிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறதாம்.

கேப்பில் மற்றொரு படம்

கேப்பில் மற்றொரு படம்

அதனால் வாடிவாசல் படத்தை துவங்குவதற்கு முன் ரவிக்குமார் படத்தில் நடித்து முடிக்க போகிறாராம் சூர்யா. அயலான் படத்தை போலவே இதுவும் சையின்ஸ் ஃபிக்சன் படமாம். இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டதாம். விரைவில் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு, படத்தின் ஷுட்டிங்கை துவங்க போகிறார்களாம். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறதாம்.

பாலா படத்திலும் நடிக்கிறாரா

பாலா படத்திலும் நடிக்கிறாரா

இந்த படம் மட்டுமல்ல டைரக்டர் பாலா அதர்வாவை ஹீரோவாகவும், கீர்த்தி சுரேஷை ஹீரோயினாகவும் வைத்து எடுக்க உள்ள புதிய படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடிக்க உள்ளாராம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் தயாரிக்கிறது. சூர்யா -டைரக்டர் பாலா இணையும் நான்காவது படம் இதுவாகும்.

4 படங்கள் தயாரிப்பு

4 படங்கள் தயாரிப்பு

சூர்யா தனது 2டி என்ட்ர்டைன்மென்ட் மூலம் ஒரே சமயத்தில் 4 படங்களை தயாரித்து வருகிறார். ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், உடன் பிறப்பே, ஜெய் பீம், ஓ மை டாக் ஆகிய படங்கள் அடுத்தடுத்து 4 மாதங்களில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட உள்ளது. இதில் ஜெய் பீம் படத்தில் சூர்யாவும், உடன் பிறப்பே படத்தில் ஜோதிகாவும் லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X