»   »  கேலி, கிண்டல், அவமானம்: தனுஷாக இருப்பது லேசு இல்ல பாஸு!

கேலி, கிண்டல், அவமானம்: தனுஷாக இருப்பது லேசு இல்ல பாஸு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரும்பும் பக்கம் எல்லாம் அவமானப்பட்ட தனுஷ் அதை எல்லாம் தாண்டி இன்று சாதனை நாயகனாக வலம் வருகிறார். அவரிடம் இருந்து நாம் தன்னம்பிக்கையை கற்றுக் கொள்ள வேண்டும்.

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனாக துள்ளுவதோ இளமை படம் மூலம் கோலிவுட் வந்தார் தனுஷ். அந்த படத்தின் படப்பிடிப்பில் அவரை பார்த்த ரசிர்கள் இவன் எல்லாம் ஒரு ஹீரோ. எல்லாம் நேரம் டா என அவர் காதுபடவே கூறினார்கள்.

இதை எல்லாம் கேட்டு தனுஷுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

தனுஷ்

தனுஷ்

மக்களை விடுங்கள் கோலிவுட்டில் உள்ளவர்களே தனுஷை பார்த்து இவன் எப்படிடா ஹீரோவானான். அவன் ஆளும் மூஞ்சியும். நான் இன்றைக்கு சொல்கிறேன் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இந்த பையன் ஒரு படத்தோடு காணாமல் போய்விடுவான் என்று தனுஷுக்கு கேட்கும்படி கிண்டல் செய்தனர்.

அவமானம்

அவமானம்

திரும்பும் பக்கம் எல்லாம் கேலி, கிண்டல், அவமானம் தான் தனுஷுக்கு. அதை எல்லாம் பார்த்து அவருக்கு வருத்தமும், கண்ணீரும் வந்தது. அதே சமயம் இதே ஆட்கள் முன்பு சாதித்துக் காட்ட வேண்டும் என்ற வைராக்கியமும் ஏற்பட்டது.

தேசிய விருது

தேசிய விருது

சிறந்த நடிகருக்கான தேசிய வருதை வாங்கி நடிப்பில் இவன் தேர மாட்டான் என்று கூறியவர்கள் முகத்தில் கரியை பூசினார் தனுஷ். சங்கடங்களையும் சவாலாக எடுத்துக் கொண்டு சாதிக்கும் குணமுள்ளவராக இருப்பதால் தான் அவரால் கோலிவுட்டில் தாக்குப்பிடிக்க முடிகிறது.

பாடகர்

பாடகர்

தனுஷ் நடிப்பில் ஜொலிப்பதுடன் பாடல் ஆசிரியர், பாடகராகவும் ஆகியுள்ளார். அவர் பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலம் ஆனது நாங்கள் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்று இல்லை.

English summary
Dhanush, the versatile actor has come long way from his debut movie. His path was not covered with roses but only thorns.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil