»   »  பரத் 'முனியாண்டி'

பரத் 'முனியாண்டி'

Posted By:
Subscribe to Oneindia Tamil
Bharath wtih KajalAgarwal

எம் மகன் வெற்றிக்குப் பின்னர் திருமுருகனும், பரத்தும் இணைந்து பட்டையைக் கிளப்ப வரும் 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

மெட்டி ஒலி டிவி சீரியல் மூலம் பிரபலமான இயக்குநர் திருமுருகனின் முதல் திரைப்படம் எம் மகன். பரத், கோபிகா, வடிவேலு, நாசர் ஆகியோரின் கலக்கல் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற இப்படத்திற்குப் பிறகு அடுத்த படம் குறித்து அமைதி காத்து வந்தார் திருமுருகன்.

இந்த நிலையில் இன்னும் ஒரு அட்டகாசமான கதையுடன் களத்தில் இறங்கியுள்ளார் திருமுருகன். மறைந்த தனது தந்தையின் நினைவாக முனியாண்டி என்கிற அவரது பெயரையே தனது படத்திற்கு வைத்துள்ளார். முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு என்கிற அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இப்படத்திலும் பரத் தான் நாயகன். தமிழச்சியான தாமரை என்கிற புதுமுகத்தை நாயகியாக அறிமுகப்படுத்துகிறார் திருமுருகன்.

எம் மகனில் அதகளம் செய்த வடிவேலு இப்படத்திலும் விளையாட வருகிறார். வித்யாசாகர்தான் இசையமைக்கிறார். மலேசியாவைச் சேர்நத் லோட்டஸ் பைவ் ஸ்டார் இப்படத்ைதத் தயாரிக்கிறது.

பொள்ளாச்சியில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. முனியாண்டி குறித்து திருமுருகன் கூறுகையில், எம் மகன் படத்திற்குப் பிறகு அடுத்த கதையை ரெடி செய்ய எனக்கு ஒரு வருடமாகி விட்டது. ஆனாலும் நல்ல கதையை கையில் எடுத்திருக்கும் திருப்தியுடன் உள்ளேன். வடிவேல், பரத் ஆகியோர் இணைந்து கலக்கவுள்ளனர். நாயகனுக்கு இணையாக வடிவேல் இப்படத்திலும் அசத்தவுள்ளார்.

தமிழ்ப் பெண்ணான தாமரை என்பவரை நாயகியாக அறிமுகம் செய்கிறேன். எம் மகன் வெற்றிக்குக் காரணமானவர்களில் ஒருவரான வித்யாசாகர் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். அருமையான மெலடி பாடல்களை அவர் கொடுக்கவுள்ளார்.

இந்தப் படமும் குடும்பத்துடன் காணக் கூடிய குடும்பப் படமாக இருக்கும் என்றார்.

கோபித்துக் கொண்டு போன அப்பா நடிகர்:

இதற்கிடையே, இப்படத்தில் பரத்தின் தந்தையாக நடிக்கும் மலையாள நடிகர் முரளி திடீரென படப்பிடிப்பிலிருந்து கிளம்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மலையாள முரளிக்கு இப்படத்தில் நடிக்க அட்வான்ஸாக ரூ. 1 லட்சம் தரப்பட்டிருந்தது. படப்பிடிப்புக்காக செவ்வாய்க்கிழமை முரளி பொள்ளாச்சிக்கு வந்தார். ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு வரவில்லை. நேராக லாட்ஜுக்குப் போய் விட்டார்.

இதனால் அவருக்கு காத்திருந்த திருமுருகன், நேரமானதால், அடுத்த காட்சியைப் படமாக்க முடிவு செய்தார்.

இந்த நிலையில் முரளி, லாட்ஜை விட்டு கிளம்பி ஊருக்குப் போவதாக படக்குழுவினருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து படக்குழுவினர் அங்கு விரைந்தனர். முரளியை செல்ல விடாமல் தடுத்த அவர்கள், திருமுருகனிடம் சொல்லமல் கொள்ளாமல் கிளம்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் யாருக்கும் எந்தப் பதிலையும் சொல்லாமல் எங்கேயோ பார்த்தபடி நின்றுள்ளார முரளி. பின்னர் திருமுருகன் இருந்த அறைக்குச் சென்றார். அவரிடம், எனக்கு 2 நாட்களாக பல் வலிக்கிறது. இதனால்தான் நடிக்க முடியவில்லை. அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.

தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட இழப்பை சங்கத்தில் பேசி தீர்த்துக் கொள்ளலாம் எனக் கூறி கிளம்பினார்.

பின்னர் திடீரென திருமுருகனிடம் வந்து, நான் நடிக்கிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால் அவரோ அதெல்லாம் முடியாது. நீங்கள் கிளம்பலாம் எனக் கூறி விட்டதால் முரளி கிளம்பிச் சென்றார்.

நல்ல நடிகரான முரளி ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று தெரியாமல் முனியாண்டி படக்குழுவினர் அடுத்த காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil