»   »  "காதலில் மூழ்கிய பரத் பிப்ரவரி 14 படத்திற்காக பரத்தும், ரேணுகா மேனனும் மழையில் நனைந்தபடி துள்ளாட்டம் போடும் ஒரு சூப்பர் பாட்டுஆளில்லாத கர்நாடக மலைப் பகுதியில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.ஷங்கரின் உதவியாளர் ஹோசிமின் முதன் முதலாக இயக்கி வரும் பிப்ரவரி 14 படத்தை பரத் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துவருகிறார். காதல் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றிக்குப் பிறகு இந்தப் படம் வருவது தான் இந்த எதிர்பார்ப்பிற்குக் காரணம்.இதுவும் ஓடிவிட்டால் அப்புறம் பரத்தை கையில் பிடிக்க முடியாத நிலை ஏற்படும். ஓடாவிட்டால், அப்புறம் பரத்தின் எதிர்காலம்கேள்விக்குறியாகி விடும்.தனது இந்த நிலைமையை நன்றாகவே தெரிந்து வைத்துள்ள பரத், பிப்ரவரி 14 படத்தில் மிகவும் ஈடுபாட்டுடன் நடித்துவருகிறார். அதுவும் காதல் காட்சிகளில் தான் ரொம்பவும் "ஈடுபாடு காட்டி காட்சியோடு ஒன்றி விடுகிறாராம்.கல்லூரியில் வழக்கம் போல மலரும் காதல். படிப்பு முடிந்து கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகு அந்தக் காதல் நீடித்துவெற்றி பெறுகிறதா, அல்லது இருவரும் வெவ்வேறு திசையை நோக்கி செல்கிறார்களா என்பதை மிகவும் இளமைத்துள்ளலோடு இந்தப் படத்தை எடுத்து வருகிறார் டைரக்டர் ஹோசிமின்.இந்தப் படத்தில் பரத்திற்கு ஜோடியாக மலையாள ரேணுகா மேனன் நடித்து வருகிறார். இருவரும் காதல் காட்சிகளில் போட்டிபோட்டு நடித்துள்ளார்களாம். பெரும்பாலான காதல் காட்சிகளை பெங்களூரில் சுட்டுள்ளார்கள்.படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்து விட்டன. கிளைமாக்ஸில் ஒரு பாடல் வருகிறதாம். அதுவும் டூயட் பாடல். இந்தப்பாடல் காட்சிக்காக பரத்தும், ரேணுகாவும் மழையில் நனைந்தபடியே துள்ளாட்டம் போட்டுள்ளார்கள்.இந்த சூப்பர் பாடல் காட்சியை ஆள் அரவமில்லாத கர்நாடகத்திலுள்ள சிக்மகளூர் மலைப்பகுதியில் எடுத்துள்ளார்கள். மிகவும்அடர்ந்த இந்த வனப்பகுதியில் இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தியதில்லையாம்.இதற்குக் காரணம் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பது தான். ஆனாலும் மிகவும் தைரியமாக அங்குசென்று பாடல் காட்சியை படம் பிடித்து வந்துள்ளனர்.இந்தப் படத்தின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் சீனா தானா ரகஸ்யா ஒரு சூப்பர் குத்தாட்டம் போட்டுள்ளார்.அப்ப, படம் ஓடிவிடும். சந்தோமாக இருங்க பரத்!

"காதலில் மூழ்கிய பரத் பிப்ரவரி 14 படத்திற்காக பரத்தும், ரேணுகா மேனனும் மழையில் நனைந்தபடி துள்ளாட்டம் போடும் ஒரு சூப்பர் பாட்டுஆளில்லாத கர்நாடக மலைப் பகுதியில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.ஷங்கரின் உதவியாளர் ஹோசிமின் முதன் முதலாக இயக்கி வரும் பிப்ரவரி 14 படத்தை பரத் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துவருகிறார். காதல் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றிக்குப் பிறகு இந்தப் படம் வருவது தான் இந்த எதிர்பார்ப்பிற்குக் காரணம்.இதுவும் ஓடிவிட்டால் அப்புறம் பரத்தை கையில் பிடிக்க முடியாத நிலை ஏற்படும். ஓடாவிட்டால், அப்புறம் பரத்தின் எதிர்காலம்கேள்விக்குறியாகி விடும்.தனது இந்த நிலைமையை நன்றாகவே தெரிந்து வைத்துள்ள பரத், பிப்ரவரி 14 படத்தில் மிகவும் ஈடுபாட்டுடன் நடித்துவருகிறார். அதுவும் காதல் காட்சிகளில் தான் ரொம்பவும் "ஈடுபாடு காட்டி காட்சியோடு ஒன்றி விடுகிறாராம்.கல்லூரியில் வழக்கம் போல மலரும் காதல். படிப்பு முடிந்து கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகு அந்தக் காதல் நீடித்துவெற்றி பெறுகிறதா, அல்லது இருவரும் வெவ்வேறு திசையை நோக்கி செல்கிறார்களா என்பதை மிகவும் இளமைத்துள்ளலோடு இந்தப் படத்தை எடுத்து வருகிறார் டைரக்டர் ஹோசிமின்.இந்தப் படத்தில் பரத்திற்கு ஜோடியாக மலையாள ரேணுகா மேனன் நடித்து வருகிறார். இருவரும் காதல் காட்சிகளில் போட்டிபோட்டு நடித்துள்ளார்களாம். பெரும்பாலான காதல் காட்சிகளை பெங்களூரில் சுட்டுள்ளார்கள்.படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்து விட்டன. கிளைமாக்ஸில் ஒரு பாடல் வருகிறதாம். அதுவும் டூயட் பாடல். இந்தப்பாடல் காட்சிக்காக பரத்தும், ரேணுகாவும் மழையில் நனைந்தபடியே துள்ளாட்டம் போட்டுள்ளார்கள்.இந்த சூப்பர் பாடல் காட்சியை ஆள் அரவமில்லாத கர்நாடகத்திலுள்ள சிக்மகளூர் மலைப்பகுதியில் எடுத்துள்ளார்கள். மிகவும்அடர்ந்த இந்த வனப்பகுதியில் இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தியதில்லையாம்.இதற்குக் காரணம் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பது தான். ஆனாலும் மிகவும் தைரியமாக அங்குசென்று பாடல் காட்சியை படம் பிடித்து வந்துள்ளனர்.இந்தப் படத்தின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் சீனா தானா ரகஸ்யா ஒரு சூப்பர் குத்தாட்டம் போட்டுள்ளார்.அப்ப, படம் ஓடிவிடும். சந்தோமாக இருங்க பரத்!

Subscribe to Oneindia Tamil

பிப்ரவரி 14 படத்திற்காக பரத்தும், ரேணுகா மேனனும் மழையில் நனைந்தபடி துள்ளாட்டம் போடும் ஒரு சூப்பர் பாட்டுஆளில்லாத கர்நாடக மலைப் பகுதியில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

ஷங்கரின் உதவியாளர் ஹோசிமின் முதன் முதலாக இயக்கி வரும் பிப்ரவரி 14 படத்தை பரத் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துவருகிறார். காதல் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றிக்குப் பிறகு இந்தப் படம் வருவது தான் இந்த எதிர்பார்ப்பிற்குக் காரணம்.

இதுவும் ஓடிவிட்டால் அப்புறம் பரத்தை கையில் பிடிக்க முடியாத நிலை ஏற்படும். ஓடாவிட்டால், அப்புறம் பரத்தின் எதிர்காலம்கேள்விக்குறியாகி விடும்.

தனது இந்த நிலைமையை நன்றாகவே தெரிந்து வைத்துள்ள பரத், பிப்ரவரி 14 படத்தில் மிகவும் ஈடுபாட்டுடன் நடித்துவருகிறார். அதுவும் காதல் காட்சிகளில் தான் ரொம்பவும் "ஈடுபாடு காட்டி காட்சியோடு ஒன்றி விடுகிறாராம்.

கல்லூரியில் வழக்கம் போல மலரும் காதல். படிப்பு முடிந்து கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகு அந்தக் காதல் நீடித்துவெற்றி பெறுகிறதா, அல்லது இருவரும் வெவ்வேறு திசையை நோக்கி செல்கிறார்களா என்பதை மிகவும் இளமைத்துள்ளலோடு இந்தப் படத்தை எடுத்து வருகிறார் டைரக்டர் ஹோசிமின்.

இந்தப் படத்தில் பரத்திற்கு ஜோடியாக மலையாள ரேணுகா மேனன் நடித்து வருகிறார். இருவரும் காதல் காட்சிகளில் போட்டிபோட்டு நடித்துள்ளார்களாம். பெரும்பாலான காதல் காட்சிகளை பெங்களூரில் சுட்டுள்ளார்கள்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்து விட்டன. கிளைமாக்ஸில் ஒரு பாடல் வருகிறதாம். அதுவும் டூயட் பாடல். இந்தப்பாடல் காட்சிக்காக பரத்தும், ரேணுகாவும் மழையில் நனைந்தபடியே துள்ளாட்டம் போட்டுள்ளார்கள்.

இந்த சூப்பர் பாடல் காட்சியை ஆள் அரவமில்லாத கர்நாடகத்திலுள்ள சிக்மகளூர் மலைப்பகுதியில் எடுத்துள்ளார்கள். மிகவும்அடர்ந்த இந்த வனப்பகுதியில் இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தியதில்லையாம்.

இதற்குக் காரணம் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பது தான். ஆனாலும் மிகவும் தைரியமாக அங்குசென்று பாடல் காட்சியை படம் பிடித்து வந்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் சீனா தானா ரகஸ்யா ஒரு சூப்பர் குத்தாட்டம் போட்டுள்ளார்.

அப்ப, படம் ஓடிவிடும். சந்தோமாக இருங்க பரத்!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil