»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடித்தால் கதாநாயகியாகத் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கிறார் நடிகை பாரதி.

வயசுப்பசங்க படத்தின் மூலம் அறிமுகமானவர் பாரதி. குறிஞ்சி மலராய் தமிழ் சினிமாவில் இருக்கும் தமிழ்ப் பெண்களில் இவரும் ஒருவர்.

கோவையிலிருந்து தமிழ் சினிமா ரசிகர்களை ரட்சிப்பதற்காக சென்னை வந்தவர். வயசுப் பசங்க படம் சரியாகப் போகததால் அம்மணிக்குவாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

இந்த மாதிரி சமயங்களில் பெரும்பாலான நடிகைகள் கவர்ச்சி காட்டி நடிக்கத் தயார் என்று பேட்டி கொடுத்து இரண்டு படங்களில்கவர்ச்சியாகவும், அதற்கடுத்து சில படங்களில் ஒரு பாடலுக்கு டான்ஸூம் பின்பு அக்கா, அண்ணி என்று எப்படியோ சினிமாவில்தலைகாட்டிக் கொண்டே இருந்தால் போதும் என்று இருப்பார்கள்.

ஆனால் பாரதி கொஞ்சம் வித்தியாசம். வீட்டில் சும்மாயிருந்தாலும் பரவாயில்லை; சில்லறை வேடங்களில் நடிக்க மாட்டேன்; நடித்தால்நாயகிதான் என்று ஒத்தைக்காலில் நிற்கிறார்.

ஏன் இப்படி என்று கேட்டபோது,

வயசுப்பசங்க படம் சரியாகப் போகவில்லை. அதற்கடுத்து எனக்குப் பிடிச்ச மாதிரி தயாரிப்பு கம்பெனியோ, இயக்குநரோ அமையவில்லை(இதெல்லாம் ரொம்ப ஓவர் டாக்).

அதே நேரத்தில் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தேன். சும்மா ஒப்புக்கு வந்து ஆடிவிட்டு போவதில் எனக்குவிருப்பமில்லை.

பேசாமல் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு ப்ளஸ் ஒன் (நல்லவேளை எல்.கே.ஜின்னு சொல்லவில்லை) படிப்பை தொடரலாம் எனநினைத்திருந்தபோதுதான் ஒளிப்பதிவாளர் இளவரசன் மூலம் கலக்கல் பட வாய்ப்பு வந்தது.

அதற்கடுத்து காதல் முடிச்சு உட்பட சில படங்களும் வந்தன.

சினிமா ரொம்ப ஈஸி என்று நினைத்து வந்தேன். வந்த பிறகுதான் தெரியுது இதிலுள்ள கஷ்டம். ரொம்பவும் கஷ்டப்பட்டால்தான் இங்கேஜெயிக்க முடியும். நான் தமிழ் பொண்ணா இருப்பதால் கதையை உள்வாங்கி நடிக்க முடிகிறது.

ஆனால் கவர்ச்சி காட்ட இந்த பொண்ணு சரிவராது என்ற காரணத்திற்காக பட வாய்ப்புகள் வராம போய்விடுகிறது என்று வருத்தமாககூறுகிறார்.

இதற்காகத் தான் தன்னைத் தானே பல வகைகளிலும் கட்டாக படம் பிடித்து தயாரிப்பாளர்களுக்கு ரவுண்டு விட்டு வருகிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil