»   »  பொங்கலுக்கு 'பீமா'!

பொங்கலுக்கு 'பீமா'!

Subscribe to Oneindia Tamil
Vikram -Trisha
விக்ரம், திரிஷாவின் மிரட்டல் நடிப்பில் உருவாகியுள்ள பீமா பெரும் தாமதத்திற்குப் பிறகு ஒரு வழியாக பொங்கலையொட்டி ஜனவரி 11ம் தேதி திரைக்கு வருகிறது.

விக்ரம் நடித்த ஒரு படம் மிக மிக தாமதமாக வெளியாவது இதுவே முதல் முறை. அந்த அளவுக்கு பலம் வாய்ந்த பீமா, படாதபாடு பட்டு விட்டார். பல்வேறு குழப்பங்கள், நிதிப் பிரச்சினைகள், வழக்குகள் என இப்படம் பெரும் சிக்கல்களை சந்தித்து விட்டது.

இந்த நிலையில் பீமாவுக்கு நல்ல காலம் பிறந்துள்ளது. ஜனவரி 11ம் தேதி திரைக்கு வருகிறதாம் பீமா.

விக்ரம் நடித்து கடைசியாக வந்த படம் மஜா. அது 2006ம் ஆண்டு பொங்கலுக்கு வந்தது. தற்போது பெரும் இடைவெளிக்குப் பிறகு அடுத்த படம் ரிலீஸாகவுள்ளது.

பீமா படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பெரும் நிதி நெருக்கடியில் இருந்து வந்தார். இதனால் படத்தைத் திரையிட முடியவில்லை. இதையடுத்து அய்ங்கரண் இன்டர்நேஷனல் நிறுவனம் பீமாவை திரையிட உதவ முன்வந்தது.

ஏற்கனவே பொங்கலுக்கு வருவதாக இருந்த மிகப் பெரிய படமான கமல்ஹாசனின் தசாவதாரம் ஏப்ரல் மாதத்திற்குத் தள்ளிப் போய் விட்டது. எனவே வருகிற பொங்கல் பண்டிகையின்போது வெளியாகப் போகும் பெரிய படம் விக்ரமின் பீமாதான்.

லிங்குச்சாமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட் ஆகி விட்டன என்பது நினைவிருக்கலாம்.

'புஷ்டி' யாக வாங்க பீமா!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil