»   »  மும்பையில் பில்லா 'மேஜிக்'

மும்பையில் பில்லா 'மேஜிக்'

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images

அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிக்க, அட்டகாசமாக உருவாகியிருக்கும் பில்லா படத்தின் கிராபிக்ஸ் நகாசு வேலைகள் மும்பையில் உள்ள அதி நவீன ஸ்டுடியோவில் தயாராகி வருகிறதாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மாபெரும் வெற்றிப் படமான பில்லா, இப்போது அதே பெயரில் அஜீத் நடிக்க உருவாகியுள்ளது. அஜீத்துடன் ஜோடியாக நமீதா, நயனதாரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தின் பெரும்பாலான பகுதிகளை மலேசியாவில் வைத்து ஷூட் செய்துள்ளனர். படத்தின் வசனக் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை மலேசியாவில் முடித்து விட்டு திரும்பியுள்ள படக்குழு இப்போது கிராபிக்ஸ் வேலைகளில் தீவிரமாகியுள்ளது.

படத்தில் பல புத்தம் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிறப்புக் காட்சிகளை திணிக்கவுள்ளனர். இதை செய்யும் வசதி மும்பையில்தான் இருக்கிறது என்பதால் அங்கு இயக்குநர் விஷ்ணுவர்த்தன் உள்ளிட்டோர் முகாமிட்டுள்ளனர்.

தமிழில் முதல் முறையாக இப்படத்தில் நயனதாரா சற்றே கூடுதல் கிளாமருடன் நடித்துள்ளார் என்பது பில்லாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று. நமீதாவைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர் நடிக்கும் ரோல் ஒரிஜினல் பில்லாவில் பிரவீணா நடித்த கேர்கடர். நமீதாவும் கிளாமரில் திளைக்க வைப்பார் என்பது நிச்சயம்.

Read more about: ajith billa graphics mumbai

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil