»   »  'பில்லா'வுக்குப் பெரிய விலை!

'பில்லா'வுக்குப் பெரிய விலை!

Subscribe to Oneindia Tamil


அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடித்துள்ள பில்லா -2007 படம் பெரும் விலைக்கு விற்பனையாகியுள்ளது. இப்படத்தை திரையிடும் உரிமையை பிரமீட் சாய்மீரா நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளதாம்.

Click here for more images

ரஜினிகாந்த்தின் சூப்பர் ஹிட் படமான பில்லா, அஜீத் நடிப்பில் பில்லா -2007 என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. இதில் நயனதாரா, நமீதா ஆகியோர் நடித்துள்ளனர். ஆனந்தா சுரேஷ் தயாரித்துள்ளார். விஷ்ணுவர்த்தன் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தை தீபாவளிக்குத் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு வரை, திட்டமிட்டபடி தீபாவளிக்கு பில்லா வருமா என்பதில் சந்தேகம் நிலவியது. காரணம், இன்னும் பட வேலைகள் முழுமையாக முடியாத காரணத்தால்தான்.

ஆனால் தற்போது தீபாவளிக்கு கண்டிப்பாக பில்லா வெளியாவது உறுதியாகியுள்ளது. பிரமீட் நிறுவனம் இப்படத்தை வாங்கியுள்ளதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த நிறுவனம் தீபாவளிக்கு வெளியாகும் விஜய்யின் அழகிய தமிழ் மகன், சத்யராஜின் கண்ணாமூச்சி ஏனடா, ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் ஆகிய படங்களை திரையிடும் உரிமையை வாங்கியுள்ளது. இப்போது பில்லாவையும் வாங்கியுள்ளது.

இதன் மூலம் கோலிவுட்டில் அதிக படங்களை திரையிடும் உரிமையை வாங்கியுள்ள பெரிய நிறுவனமாக பிரமீட் உருவெடுத்துள்ளது. மேலும், தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பல தியேட்டர்களையும் இந்த நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பில்லா குழுவினர் தற்போது மலேசியாவில் முகாமிட்டுள்ளனர். அங்கு அஜீத், நயனதாரா பங்கேற்கும் வெத்தலையைப் போட்டேண்டி பாடலின் படமாக்கம் நடந்து வருகிறது. அடுத்த வாரம் சென்னைக்குத் திரும்புகின்றனர்.

அக்டோபர் 3வது வாரத்தில் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் தொடங்கவுள்ளது.

Read more about: billa
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil