தனுஷின் இட்லி கடை.. ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் எமோஷன்.. முதலில் நிறுத்துங்க.. வறுத்தெடுத்த பிரபலம்

சென்னை: தனுஷ் நடித்து இயக்கி இருக்கும் இட்லி கடை திரைப்படம் அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படம் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் படத்தின் ப்ரமோஷன் பணிகள் பயங்கரமாக சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. இந்நிலையில் தனுஷை கலாய்த்து பிரபல திரைவிமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பது ட்ரெண்டாகி இருக்கிறது.

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான குபேரா, ராயன், கேப்டன் மில்லர் ஆகிய மூன்று படங்களுமே தோல்வியைத்தான் சந்தித்தன. குபேரா திரைப்படம் தமிழ்நாட்டில் சரியாக போகாவிட்டாலும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது. இருப்பினும் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லையே என்று தனுஷ் உச்சக்கட்ட அப்சட் அடைந்தார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாகவே ஹிட் கொடுக்காததால் எப்படியாவது ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்பதில் முழுமனைப்போடு இருக்கிறார் தனுஷ்.

இட்லி கடை போட்ட தனுஷ்: நிலைமை இப்படி இருக்க இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார் அவர். டன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் தனுஷுடன் அருண் விஜய், சத்யராஜ், ராஜ் கிரண், நித்யா மேனன் என பலர் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே தனுஷும் நித்யா மேனனும் சேர்ந்து திருச்சிற்றம்பலம் என்ற ஹிட் படத்தை கொடுத்ததால் இந்த ஜோடி மீது கோலிவுட்டில் தனி எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Blue Sattai Maran Trolls Dhanush s Idli Kadai Promotion

அக்டோபர் ஒன்றாம் தேதி ரிலீஸ்: முதலில் இந்த வருடம் ஏப்ரல் மாதத்திலேயே இப்படம் ரிலீஸாக இருந்தது. ஆனால் அந்த மாதத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி வெளியானதால் இதன் ரிலீஸ் தள்ளிப்போனது. ஒரு வழியாக அக்டோபர் ஒன்றாம் தேதி இப்படமானது திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பட ரிலீஸுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே இருப்பதன் காரணமாக படத்துக்கான ப்ரமோஷன் பணிகள் படு வேகமாக நடந்துவருகின்றன.

பெண்மணியின் பேச்சு: இப்படத்தில் இளவயது தனுஷாக நடித்த சிறுவனின் தாயார் தனுஷ் குறித்து ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசுகையில், "என் உயிர் இருக்கும்வரை உங்களை நினைத்திருப்பேன். எனது மகன் வயிற்றில் இருக்கும்போதிருந்தே உங்களை நினைத்துதான் பெற்றெடுத்தேன். அதனால்தான் அவன் உங்களைப் போன்றேன் இருப்பான். நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனுஷுக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் என்று சொல்லிதான் வளர்த்திருக்கிறேன்" என குறிப்பிட்டார்.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இந்நிலையில் இதுகுறித்து பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "தனுஷ் அவர்களே...இட்லிகடை படத்தை எல்லாரும் பாத்து ஹிட் ஆக்கிடறோம்.தயவு செஞ்சி இந்த pre release சென்டிமென்ட் பெர்ஃபாமன்ஸ்களை நிறுத்திடுங்க. இதுக்கு மேல உணர்ச்சி வசப்பட்டா.. எங்க பாடி தாங்காது. இவங்க கணவர் மைண்ட் வாய்ஸ் என்னவா இருக்குமோ.. பாவம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X