இட்லி கடை இசை வெளியீட்டு விழா.. ஹெவியான உருட்டு.. தனுஷை வைத்து செய்யும் ப்ளூ சட்டை மாறன்

சென்னை: நடிகர் தனுஷ் தானே இயக்கி நடிக்கும் படமான இட்லி கடை விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது இதில் படக்குழுவினரும் தனுஷின் ரசிகர்களும் திரைத்துறையில் இருந்து சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொண்டார்கள்.

கோலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது என பிஸியாக இருக்கிறார். தான் கால் வைத்த அத்தனை ஜானகர்களிலும் தனுஷ் தனது முத்திரையை ஆழமாக பதித்திருக்கிறார். அவர் முதன்முதலாக இயக்கிய பவர் பாண்டி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அடுத்ததாக அவர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கினார் அந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

நடிப்பில் ரிசல்ட் சுமார்தான்: தனுஷின் நடிப்பை பொறுத்தவரை அவர் கடைசியாக நடித்த குபேரா, ராயன், கேப்டன் மில்லர் ஆகிய மூன்று படங்களுமே ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றன. அதிலும் ராயல் திரைப்படம் படுமோசமான தோல்வியை சந்தித்தது. அந்த படம் அவரது ஐம்பதாவது படம் என்பதும் அவரே இயக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. ராயனின் தோல்வி குபேராவில் சரியாகும் என்று எதிர்பார்த்தார்.

Blue Sattai Maran Trolls Idli Kadai Audio Launch and Dhanush
Photo Credit:

குபேராவும் சுமார்தான்: சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. நிச்சயம் இப்படம் தமக்கு மிகப்பெரிய ஹிட் ஆக அமையும் என்று தனுஷும் எதிர்பார்த்தார். ஆனால் அந்த படமும் சுமாரான வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டில் படம் சரியாக போகாவிட்டாலும் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சக்கை போடு போட்டது. இது ஒரு வகையில் அவருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக அமைந்தது.

இட்லி கடை போட்ட தனுஷ்: அவர் இப்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். அந்த படத்தில் நித்யா மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அருண் விஜய் ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் ஏப்ரல் மாதத்திலேயே இத்திரைப்படம் ரிலீஸ் ஆவதாக இருந்தது ஆனால் அந்த மாதம் அஜித்தின் குட் பேட் அட்லி திரைப்படம் வெளியானதால் ரிலீஸ் ஆனது தள்ளிப்போனது. இந்தப் படமாவது தனுஷுக்கு ஒரு வெற்றி படமாக அமையுமா என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது

இட்லி கடை இசை வெளியீட்டு விழா: சூழல் இப்படி இருக்க இட்லி கடை திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதில் தனுஷின் பேச்சு அனைவரது கவனத்தையும் வைத்தது. அதேபோல் அவரது மேலாளர் ஸ்ரேயாஸின் பேச்சும் மிகப்பெரிய வைரல் ஆனது. தனுஷின் மேலாளர் பேசுகையில்,"ஃபேமஸ் ஆவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று உழைத்து ரத்தம் சிந்தி முன்னேறுவது. இரண்டாவது உச்சத்தில் இருப்பவரை அடிப்பது. தனுஷால் வாழ்ந்தவர்கள் வளர்ந்த பிறகு அவரையே அடிக்கிறார்கள். தைரியம் இருந்தால் நேருக்கு நேர் வந்து அடிக்க வேண்டும். அவர் நல்லவனாக இருக்க வேண்டும். ரொம்ப நல்லவராக இருக்கக்கூடாது" என்றிருந்தார்.

ப்ளூ சட்டை ட்வீட்: இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில்,"வேற எந்த மாநிலத்து சினிமா pre release event லயும் நடக்காத காமடிகள் கோலிவுட்லதான் நடக்கும். இவங்களுக்கு எதிரா யாரோ சதி செய்றாங்கன்னு சொல்லுவாங்க. ஆனா யாருன்னு சொல்ல மாட்டாங்க. அன்பை பரப்புங்க, ignore negativity, சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன்னு தத்துவமும், அனுதாபமும் கனமழையா கொட்டும். படம் சம்மந்தமா பேச பல விஷயங்கள் இருக்கும். அதை விட.. இதைத்தான் ஹெவியா உருட்டுவாங்க. Kollywood pre release events - Cringe Ultra Pro MAXXX" என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X