இமயமலையில் அப்படி செய்தாரா ரஜினிகாந்த்?.. இது என்னங்க புது பஞ்சாயத்து கிளம்பிருக்கு.. என்ன ஆச்சு?
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான கூலி படம் தோல்வியடைந்தது. அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்தார். இப்போது கிடைத்திருக்கும் ஷூட்டிங் பிரேக் காரணமாக இமயமலைக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயகத்தில் உருவான கூலி திரைப்படம் வெளியாகி பெரிய தோல்வி படமாக அமைந்துவிட்டது. முக்கியமாக லோகேஷை வைத்து கடுமையாக விமர்சனம் செய்தார்கள் ரசிகர்கள். விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி படம் பலத்த அடி வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ரொம்பவே ஹைப்பை வைத்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் உச்சக்கட்ட சோகத்துக்கு சென்றார்கள்.
ஜெயிலர் 2: கூலி படத்தை முடித்துவிட்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் பாலய்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்தின் முதல் பாகம் மெகா ப்ளாக் பஸ்டர். எனவே இந்தப் பாகத்தையும் அதுபோன்றே கொடுத்துவிட வேண்டும் என்பதில் ரொம்பவே தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறார் நெல்சன். படம் பற்றி பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் வேண்டாம் எனவும் அவர் சொல்லிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இமயமலையில் ரஜினி: இதற்கிடையே தீவிர ஆன்மீகவாதியான ரஜினிகாந்த், பாபாவின் அதிதீவிர பக்தர் என்பது அனைவரும் அறிந்தது. வருடா வருடம் இமயமலைக்கு சென்றுவிடுவார். அங்கு சென்ற அவர்; தான் ஒரு பெரிய ஸ்டார் என்பதையெலாம் எடுத்து தூர எறிந்துவிட்டு சராசரி மனிதனாகவே இருப்பார். அது பலரையும் ஆச்சரியப்படுத்தும். அப்படித்தான் இந்த முறை பயணத்திலும் இருக்கிறார். இந்நிலையில் அவரை கலாய்த்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டிருக்கிறார்.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தள்ளி இமயமலை குகையில் சில பலர்.. தியானம் செய்வதற்கான காரணங்கள்: வாகன சப்தம், மனிதர்களின் தொந்தரவு, அலைபேசி இம்சை, வீடு, தொழில், மற்றும் வேலை பிரச்னைகளில் இருந்து விடுபட்டு நிம்மதியை தேடுதல். உடல் நலத்தை பேண.. சுத்தமான காற்றை உள்வாங்குதல். இயற்கை அழகை ரசித்தல்.
அங்குள்ள மக்களின் வாழ்வியலையும் காணும் வாய்ப்பு. இந்த நிம்மதி.. அங்கு சென்றும்.. தலீவருக்கு இல்லை. ரோட்டுக்கடையில் தன் கையால் தானே எளிமையாக சாப்பிடுகிறார் என்கிறார்கள். போகுமிடமெல்லாம் ஃபோட்டோக்களை எடுத்து தள்ள சிலரும் உடன் செல்கிறார்கள். குகையில் தியானம் செய்தாலும் ஃபோட்டோ, வீடியோ வருகிறது. நிம்மதியை தேடி போன இடத்தில் இப்படி ஃபோட்டோஷூட் செய்து மீடியாவுக்கு அனுப்பும் விளம்பர யுக்தி எதற்கு என ஒருதரப்பும்.
பிடித்த வார்த்தை எளிமை: இதை அவர் விரும்பவில்லை. யாரோ சிலர் candid shoot செய்கிறார்கள் என மறுதரப்பும் வாதம் செய்கிறார்கள். தலீவரை நிம்மதியாக இருக்க விடுங்கள். அவருக்கு விளம்பரம் பிடிக்காது. பிடித்த ஒரே வார்த்தை: எளிமை, எளிமை, எளிமை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











