பைசன் வெற்றி‌‌.. பாராட்டிய ரஜினி.. சிவகார்த்திகேயனை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்.. அடங்கமாட்றாரே

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா செலிபிரிட்டிகளும் பாராட்டிவருகிறார்கள். அந்தவகையில் ரஜினிகாந்த் தன்னை பாராட்டியதாக மாரி செல்வராஜ் மகிழ்ச்சியோடு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதனை வைத்து சிவகார்த்திகேயனை பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வம்பிழுத்து ட்வீட் செய்திருக்கிறார்.

கோலிவுட்டில் எங்கும் பைசன் பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. பரியேறும் பெருமாள் படத்துக்கு பிறகு மாரி நல்ல படங்களை இயக்கியிருதாலும் பைசன் ஸ்பெஷல்தான் என கொண்டாடிவருகிறார்கள். வசூலிலும் பட்டாசாக இருக்கும் படம் இதுவரை 35 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதன் காரணமாக படக்குழு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது.

துருவ் விக்ரமுக்கு சூப்பர்: அதேபோல் துருவ் விக்ரமுக்கும் மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் படத்தில் கிடைத்திருக்கிறது. மணத்தி கணேசனிடம் அவர் பெற்ற கபடி பயிற்சி, மாரி செல்வராஜ் சொல்லிக்கொடுத்ததை சரியாக உள்வாங்கி நடித்தது என அவரது உழைப்பு இதில் அபாரமானது. நிச்சயம் துருவ்வுக்கு பைசன் படத்துக்கு பிறகு பெரிய எதிர்காலம் ஒன்று உறுதியாகியிருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

Blue Sattai Maran Trolls Sivakarthikeyan After Rajinikanth Praises Mari Selvaraj s Bison
Photo Credit:

பாராட்டு மழையில் மாரி செல்வராஜ்: இது ஒருபக்கம் இருக்க மாரி செல்வராஜை நடிகர்களும், இயக்குநர்களும் பாராட்டிவருகிறார்கள். அந்த உலகத்திலிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை என இயக்குநர் லிங்குசாமியும், மாரி செல்வராஜ் பெருஞ்செல்வம் என வசந்தபாலனும், பல காலத்துக்கு பைசன் முட்டி மோதுவான்; இது ஒரு மைல்கல் என இயக்குநர் இரா. சரவணனும் புகழ்ந்து தள்ளிவிட்டார்கள்.

ரஜினியின் பாராட்டு: அதேபோல் ரஜினிகாந்த்தும் தனது பங்குக்கு மாரி செல்வராஜை பாராட்டியிருக்கிறார். இதுகுறித்து மாரி தனது எக்ஸ் பக்கத்தில், "சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள் ' -சூப்பர் ஸ்டார் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

ப்ளூ சட்டை மாறனின் ட்வீட்: இந்நிலையில் இதனை குறிப்பிட்டு ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "திடீர் தளபதி ஏன் அமைதியாக இருக்கிறார்?" என கேள்வி எழுப்பி சிவகார்த்திகேயனை வம்பிழுத்திருக்கிறார். இந்த ட்வீட் இப்போது ட்ரெண்டாகியிருக்கிறது. கோட் படத்தில் சிவாவிடம் விஜய் துப்பாக்கி கொடுத்த சீனிலிருந்து எஸ்கேவை ஒருதரப்பினர் திடீர் தளபதி என கிண்டல் செய்துவருவதும், விஜய் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என அவர் உறுதியாக சொல்லிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அவரை தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் திடீர் தளபதி என சொல்வதை குறைத்துக்கொள்ளவே இல்லை. அவரது இந்த ட்வீட்டை பார்த்த எஸ்கே ரசிகர்கள், இதில் ஏன் சிவாவை இழுத்துவிட வேண்டும். இவருக்கு இதே வேலையா என்று கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X