விஜய் கொடுத்த துப்பாக்கி.. சந்தேகப்படும் சிவகார்த்திகேயன்.. பிரபலம் இப்படி லோக்கலா இறங்கி கலாய்ச்சிருக்காரே

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மதராஸி, அமரன் ஆகிய இரண்டு படங்களுமே ஹிட்தான். அதிலும் அமரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. தற்போது பராசக்தி படத்தில் நடித்துவரும் எஸ்கே; அதை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க அவர்தான் அடுத்த விஜய் என்றும் அவரது ரசிகர்கள் சொல்லிவருகிறார்கள்.

சிவகார்த்திகேயன் நடித்திருந்த அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூலித்தது. இதனால் அவரது கரியரின் கிராஃபும் சரசரவென்று உயர்ந்தது. அதிலும் எஸ்கேவின் சம்பளம் பல மடங்கு உயர்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அந்தப் படத்துக்கு பிறகு வெளியான மதராஸி திரைப்படமும் 50 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படி அவர் நடித்த இரண்டு படங்களும் வரிசையாக சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருப்பதால் அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

அடுத்த விஜய்?: இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார் அவர். அடுத்த வருடம் படம் ரிலீஸாகவிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க GOAT படத்தில் சிவாவிடம் விஜய் துப்பாக்கியை கொடுத்ததிலிருந்து எஸ்கேதான் அடுத்த விஜய் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் மதராஸி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அதனை திட்டவட்டமாக மறுத்திருந்தார். இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் சிவகார்த்திகேயனை கலாய்த்திருக்கிறார்.

Blue Sattai Maran trolls Sivakarthikeyan by comparing to Vijay
Photo Credit:

ப்ளூ சட்டை ட்வீட்: அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "SWOT Analysis. இயல்பிலேயே நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். அது இது எது நிகழ்ச்சி மூலம் சினிமாவிற்கு வரும் முன்பே மக்களை கவர்ந்தவர். ஒருசில படங்களில் காமடியனாக நடித்து.. சட்டென காமடி ஹீரோவாகி வெற்றி பெற்றார். அதன்பிறகு சீரியஸ் கேரக்டர்களில் நடித்து மார்க்கெட்டை உயர்த்த பார்த்தார். அதில் வெற்றிபெற முடியவில்லை.இதற்கிடையே தயாரிப்பாளராகவும் மாறினார்.

அதெல்லாம் ஓடவில்லை: இதில் 'கனா' மட்டும் சுமாராக போனது. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, வாழ், கொட்டுக்காளி, குரங்கு பெடல் போன்றவை ஓடவில்லை. டாக்டர், டான் போன்ற படங்கள் ஹிட்டாகி திரும்பவும் ஃபார்முக்கு வந்தார். ஆனால் ப்ரின்ஸ், மாவீரன், அயலான் போன்றவை.. மண்ணை கவ்வின. GOAT இல் தளபதியிடம் துப்பாக்கியை வாங்கி.. 'திடீர் தளபதி'யாக மாறினார். சாய் பல்லவியின் சிறந்த நடிப்பால் 'அமரன்' எதிர்பாராத வெற்றியை பெற்றது.

இவர்தான் அடுத்த விஜய்: பக்கத்து இலைக்கு பாயாசம் என்பது போல அமரனின் வெற்றி சாய் பல்லவியை விட.. இவருக்குத்தான் பெரிய மார்க்கெட்டை திறந்தது. சம்பளமும் பலமடங்கு ஏறியது. இவர்தான் அடுத்த விஜய் என தியேட்டர் ஓனர்களும், சினிமா வல்லுனர்களும் கொம்பு சீவி விட்டார்கள். இதை உண்மையென இவர் உறுதியாக நம்பினார். நான்தான் அடுத்த இளைய தளபதி என முடிவும் செய்தார்.அமரன் வெற்றியான சில நாட்களில்.. சோஷியல் மீடியாவில் குறுக்க மறுக்க ஓட ஆரம்பித்தார்.

ஏகப்பட்ட ஃபோட்டோக்கள், வீடியோக்களை இறக்கினார். திடீரென நல்லக்கண்ணு ஐயாவை சந்திப்பது, IPL போட்டியை நேரில் பார்ப்பது என ரக ரகமாக ஃபோட்டோ, வீடியோக்கள். சிறிய படங்களை எடுத்த படக்குழுக்களை தன் ஆபீஸ்க்கு வரவைத்து ECR பண்ணையார் பாணியில் பாராட்டினார். இதற்கு சோஷியல் மீடியாவில் தர்ம அடி விழவே.. தற்காலிகமாக இந்த சேட்டையை நிறுத்தினார். அமரனுக்கு அடுத்து.. ஆக்சன் ஹீரோவாக 'மதராஸி'யில் களமிறங்கினார். ஆனால் இதில் சாய் பல்லவி அல்லது.. அட்லீஸ்ட் சூரி கூட இல்லாததால் படம் பப்படம் ஆனது.

இந்த தோல்வியால்...தன்னிடம் தளபதி தந்தது.. அசல் துப்பாக்கியா அல்லது கலாய்ப்பதற்கு தந்த தீபாவளி துப்பாக்கியா என சந்தேகப்பட ஆரம்பித்துள்ளார். பொங்கலுக்கு பராசக்தி மூலம் தனது தளபதியின் ஜனநாயகனுடன் மோதுகிறார். 'குறுக்க இந்த கௌஷிக் வந்தா?' என லுங்கியை மடித்தபடி Raja Saab படத்தை தூக்கிக்கொண்டு.. அதே பொங்கலுக்கு வருகிறார் 'ஆந்திரா சாம்பார்' ப்ரபாஸ். பொங்கலுக்கு திடீர் தளபதியின் (தீபாவளி) துப்பாக்கி வெடிக்குமா? We are waiting" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X