»   »  மீரா ஜாக்கிரதை... மீண்டும் சர்ச்சையில் பாபி சிம்ஹா!

மீரா ஜாக்கிரதை... மீண்டும் சர்ச்சையில் பாபி சிம்ஹா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மீரா ஜாக்கிரதை என்ற படத்தில் நான் நடிக்கவே இல்லை. ஆனால் என் படத்தைப் போட்டு விளம்பரம் செய்கிறார்கள் என நடிகர் பாபி சிம்ஹா நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளார்.

பாபி சிம்ஹா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘கோ 2'. இந்தப் படத்துக்கு அடுத்து பாபி சிம்ஹா நடித்த ‘மீரா ஜாக்கிரதை' என்னும் படம் மே 27ம் தேதி வெளியாக இருப்பதாக விளம்பரம் வெளியாகியுள்ளது.

Bobby Simha caught in controversy again

ஆனால் இப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் இது குறித்து நடிகர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், ‘நான் கடந்த மூன்று வருடங்களாக தென்னிந்த நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். எனது பதிவு எண் 7871. எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பொறுட்டு சில நபர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக தினசரி நாளிதழில் நான் யார் என்று கேள்வி படாத இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பெயரில் ‘மீரா ஜாக்கிரதை' என்னும் படத்தில் நான் நடித்ததாக விளம்பரம் செய்து வருகின்றனர். மேலும் அந்த விளம்பரத்தில் எனது முந்தைய படமான ‘உறுமீன்' படத்தின் ஸ்டில்களை பயன் படுத்துகின்றனர்.

நான் ‘மீரா ஜாக்கிரதை' என்ற படத்தில் நடித்ததும் இல்லை. டப்பிங் பேசியதும் இல்லை. அந்த படத்தின் கதாநாயகியாக கூறப்படும் மோனிகா அவர்களை நேரில் கூட பார்த்ததும் இல்லை. ஆகவே மேற்படி நான் கூறிய தகவல்களுக்கு தக்க நடவடிக்கை எடுத்து எனக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்கித்தறும்படி மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் படத்தை இயக்கியுள்ள கேசவன் மற்றும் அதன் இணை இயக்குமர் மகேஷ் ஆகியோர், இது பாபி சிம்ஹா நடித்த படம்தான் என்று கூறியுள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு பாபி சிம்ஹா வில்லனாக நடித்த படம் இது என்கிறார்கள் இருவரும்.

பாபி சிம்ஹா இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. ஏற்கெனவே சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தில் நடித்துவிட்டு டப்பிங் பேசாமல் நிறுத்திவிட்டார். அந்தப் படத்தில் நான் நடிக்கவே இல்லை என்றும் கூறினார். பின்னர் வேறு ஒருவரை வைத்து டப் செய்து படத்தை வெளியிட்டது நினைவிருக்கலாம்.

English summary
Actor Bobby Simha has filed a complaint at Nadigar Sangam on Meera Jaakirathai movie. In his complaint he says that he never involved in the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil