Dude Overseas Box Office: ஓவர்சீஸ் ரசிகர்களை அப்படியே அள்ளிய பிரதீப் ரங்கநாதன்.. இத்தனை கோடி வசூலா?

சென்னை: தமிழ் சினிமாவில் சில முன்னணி நடிகர்களை தவிர பல பிரபல நடிகர்களின் படங்கள் கூட தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்கள் மற்றும் ஓவர்சீஸில் பெரிதாக ரசிகர்களை கவராது. பாக்ஸ் ஆபீஸிலும் ஓவர்சீஸில் அடிவாங்கிவிடும். ஆனால், 3 படங்களிலேயே பிரதீப் ரங்கநாதன் ஓவர்சீஸ் மற்றும் நார்த் அமெரிக்கா மார்க்கெட்டை பெரிதாக பிடித்துள்ளது தான் டியூட் படத்தின் அசுர வசூல் வேட்டைக்கு காரணம் என்கின்றனர்.

நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தின் லைஃப் டைம் வசூல் 73 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், படம் வெளியான வெறும் 4 நாட்களிலேயே இட்லி கடையை இடித்து தள்ளி முன்னேறிவிட்டார் டியூட் பிரதீப் ரங்கநாதன்.

Box Office Pradeep Ranganathan catches Overseas fans with Dude Movie
Photo Credit:

இந்த ஆண்டு அவரது டிராகன் படத்தின் வசூலை தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் பிரதீப் ரங்கநாதனே அதையும் முறியடிப்பார் என்கின்றனர்.

ஓவர்சீஸ் மார்க்கெட்டை பிடித்த பிரதீப்: தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஒரு சில நடிகர்களுக்கே ஓவர்சீஸில் நல்ல மார்க்கெட் உள்ளது. இந்நிலையில், அந்த வரிசையில் தற்போது பிரதீப் ரங்கநாதனும் இணைந்துவிட்டார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன் திரைப்படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றாலும், ஓவர்சீஸ் மார்க்கெட்டை பெரிதாக பிடிக்கவில்லை. ஆனால், டியூட் திரைப்படம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மற்றும் ஓவர்சீஸில் பாக்ஸ் ஆபீஸ் வேட்டை நடத்தி வருகிறது.

நார்த் அமெரிக்கா வசூல்: டியூட் படத்தின் வசூல் விவரத்தை அதிகாரப்பூர்வமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தினமும் அறிவித்து வருகிறது. 3 நாட்களில் 66 கோடி வசூல் என அறிவித்துள்ளது. தீபாவளி தினத்தன்று மேலும், ஒரு 20 கோடி வசூல் வந்தால் 86 கோடி வசூலை டியூட் ஈட்டியிருக்கும் என தெரிகிறது. விரைவில் அந்த போஸ்டரும் வெளியாகும். இந்நிலையில், படத்தை நார்த் அமெரிக்காவில் வாங்கி வெளியிட்ட பிரத்யங்கரா சினிமாஸ் டியூட் திரைப்படம் நார்த் அமெரிக்காவில் மட்டுமே 5 லட்சத்து 75 ஆயிரம் டாலர்கள் வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் 5 கோடிக்கும் அதிக வசூலை வட அமெரிக்காவில் மட்டுமே டியூட் அள்ளியிருக்கிறது. இந்த ஆண்டு வெளியான பல இளம் நடிகர்களின் படங்கள் மொத்தமாக தமிழ்நாட்டிலேயே அந்த வசூலை ஈட்டவில்லை. ஹரிஷ் கல்யாணின் டீசல் திரைப்படத்தின் வசூல் இதுவரை ஒட்டுமொத்தமாகவே உலகளவில் 1.93 கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சரவெடி வெடித்த பிரதீப்: டிராகன் படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுடன் டியூட் பிரதீப் ரங்கநாதன் தீபாவளி பண்டிகையின் போது சரவெடி வெடித்துக் கொண்டாடிய வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இந்த தீபாவளி பிரதீப் ரங்கநாதனுக்கு மறக்க முடியாத தீபாவளியாக மாறியுள்ளது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகி இன்னொரு 100 கோடி கிளப் படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஹாட்ரிக் வெற்றியை அடிக்கவும் பிரதீப் ரங்கநாதன் வெயிட்டிங். சம்பளமும் 50 கோடிக்கு மேல் எகிறிடும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X