»   »  தனுஷ் மன்னிப்பு கேட்கணும், இல்லை...: கொந்தளிக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்

தனுஷ் மன்னிப்பு கேட்கணும், இல்லை...: கொந்தளிக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் டிடிஹெச் நிறுவன விளம்பரத்தில் தனுஷ் கேபிள் டிவி ஆபரேட்டர்களை இழிவுபடுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.

தனுஷ் படங்கள் தவிர ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் தனியார் நிறுவன டிடிஹெச் விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில் அவர் ஏதோ உளறுகிறார், என்ன நான் கூறியது எதுவும் புரியவில்லை தானே இது போன்று நமக்கு புரியாத மொழிகளில் பல சேனல்கள் வருகிறது.

Cable TV operators turn against Dhanush

அதனால் இந்த டிடிஹெச்சை வாங்கினால் உங்களுக்கு புரியும் மொழிகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி பணத்தை மிச்சப்படுத்துங்கள். இல்லை பணம் நிறைய இருக்கிறது என்றால் புரியாத சேனல்களுக்கும் சேர்த்து பணம் கட்டுங்கள் என்கிறார் தனுஷ்.

தனுஷ் அந்த விளம்பரத்தில் தங்களை இழிவுபடுத்தியதாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். அந்த விளம்பரத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தனுஷ் தங்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளார். தனுஷ் மன்னிப்பு கேட்க தவறினால் அவருக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Read more about: dhanush, dth, தனுஷ்
English summary
Dhanush' DTH advertisement hasn't gone well with Cable TV operators. They want Dhanush to offer appology elese to face consequences.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil