»   »  சிரஞ்சீவியால் பழைய மாதிரி நடிக்க முடியுமா? ரசிகர்கள் சந்தேகத்தைப் போக்க ஒரு கலர்புல் ஷோ!

சிரஞ்சீவியால் பழைய மாதிரி நடிக்க முடியுமா? ரசிகர்கள் சந்தேகத்தைப் போக்க ஒரு கலர்புல் ஷோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் டாப்பிலிருந்த காலத்தில் அரசியலுக்குப் போய், முதல்வர் நாற்காலி ஆசை நிறைவேறாத சூழலில் மத்திய அமைச்சராகி, இப்போது மீண்டும் சினிமாவுக்கே திரும்பியிருக்கிறார் சிரஞ்சீவி.

இப்போது அவர் நடித்துக் கொண்டிருப்பது 150வது படம்.

படப்பிடிப்பு தொடங்கி வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. 9 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடிக்க வருகிறார். மீண்டும் பழைய மாதிரி நடிக்க முடியுமா? என்று ரசிகர்கள் சிலரும் மீடியாவும் கேள்வி எழுப்பி இருந்தன.

அதற்கு பதில் சொல்வதுபோல ஒரு விஷயம் செய்தார் சிரஞ்சீவி. கடந்த ஞாயிற்றுக்கிழமை 'சினி மா' (Cine Maa) விருதுகள் நிகழ்ச்சிக்காக அவரை வைத்து ஒரு சிறப்பு எபிசோட் படமாக்கினர்.

6 கேரக்டர்கள்

6 கேரக்டர்கள்

அதில் பங்கேற்ற அவர், தனது சூப்பர் ஹிட் படங்களிலிருந்து 6 கேரக்டர்களை மீண்டும் நடித்துக் காட்டி அசர வைத்தார்.

எத்தனை ஆண்டுகளானாலும் அவரால் தனது பழைய கம்பீரம், ரசிகர்களைக் கட்டிப் போடும் உடல் மொழியுடன் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது அவரது உற்சாக நடிப்பு.

ஸ்வயம் க்ருஷி

ஸ்வயம் க்ருஷி

கே விஸ்வநாத் இயக்கத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிரஞ்சீவி நடித்த படம் ஸ்வயம் க்ருஷி. இதில் செருப்புத் தைக்கும் தொழிலாளியாக வருவார். அந்த வேடத்தில் மீண்டும் நடித்தார்.

க்ரானா மொகுடு

க்ரானா மொகுடு

சிரஞ்சீவியின் கேரியரில் பெரிய வெற்றிப் படம் இந்த க்ரானா மொகுடு. அதில் வரும் இளைஞர் சிரஞ்சீவி மாதிரியே தங்களை எண்ணிக் கொண்டு திரிந்த இளைஞர்கள் ஏராளம். சினி மா நிகழ்ச்சிக்காக மீண்டும் அந்த இளைஞர் வேடத்தில் நடித்தார் சிரஞ்சீவி.

முட்டா மேஸ்திரி

முட்டா மேஸ்திரி

சிரஞ்சீவியின் இன்னொரு முக்கிய படம் முட்டா மேஸ்திரி. அதில் வரும் தனது பாத்திரத்தையும் நடித்துக் காட்டினார். அதேபோல இந்திரா படத்தில் இடம் பெற்ற வேடம், சங்கர் தாதா எம்பிபிஎஸ் படங்களில் இடம்பெற்ற தனது பாத்திரங்களையும் நடித்துக் காட்டினார் சிரஞ்சீவி.

ஒரே நாளில்

ஒரே நாளில்

இந்த ஆறு கெட்டப்புகளிலும் ஒரே நாளில் நடித்துக் கொடுத்து அசத்தியுள்ளார் சிரஞ்சீவி. தனது திறமைக்கு வயது ஒரு பொருட்டே அல்ல என்பதை எடுத்துக் காட்டுவது போலிருந்தது அவர் நடிப்பு.

English summary
On Sunday during the event of Cine Maa Awards, Chiranjeevi once again exhibited his talent. He exhibited a total of six getups from his popular five films, which made the spectators to stick to their chairs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil