»   »  நான் உங்களுடன் படுத்துக்கட்டுமா?: பிரபல நடிகையிடம் கேட்ட ஐஸ்வர்யா ராயின் கணவர்

நான் உங்களுடன் படுத்துக்கட்டுமா?: பிரபல நடிகையிடம் கேட்ட ஐஸ்வர்யா ராயின் கணவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஜீனத் அமனை பார்த்து நான் உங்களுடன் படுத்துக் கொள்ளவா என நடிகர் அபிஷேக் பச்சன் கேட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் அதாங்க ஐஸ்வர்யா ராயின் கணவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தான் சிறுவனாக இருக்கும்போது நடந்த சம்பவம் பற்றி அவர் கூறியுள்ளார்.

 அபிஷேக் பச்சன்

நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது,

எனக்கு 5 வயது இருக்கும்போது என் தந்தை அமிதாப் பச்சனுடன் படப்பிடிப்புக்கு சென்றேன். படப்பிடிப்பு இமாச்சல பிரதேசத்தில் நடந்தது. அந்த படத்தில் ஜீனத் அமன் நடித்தார்.

அன்றைய தினம் படப்பிடிப்பு முடிந்த பிறகு இரவில் தூங்க ஜீனத் அமன் தனது அறைக்கு கிளம்பினார். அவரை பார்த்து நீங்கள் தனியாகவா தூங்கப் போகிறீர்கள் என்று கேட்டேன். அவரும் ஆமாம் என்றார்.

நான் உங்களுடன் வந்து தூங்கட்டுமா என்று கேட்டேன். அதற்கு அவர் இன்னும் கொஞ்சம் பெரியவனான பிறகு என்று சிரித்துக் கொண்டே சொன்னார் என்றார்.

English summary
Bollywood actor Abhishek Bachchan said he once asked actress Zeenat Aman whether he can sleep with her.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil