»   »  வித்தகன் விஜய்காந்த்

வித்தகன் விஜய்காந்த்

Subscribe to Oneindia Tamil

வாய் பஞ்சர் ஆனாலும், பன்ச் வசனம் பேசினால்தான் தமிழ் சினிமாவில், வண்டி ஓட்ட முடியும். அந்த வகையில், கேப்டன் விஜயகாந்த்தின் புதிய படத்தில் பன்ச் டயலாக்குகள் வரிசை கட்டி வெளுத்து வாங்க வருகின்றன.

வழக்கமாக படத்தில் இடம் பெறும் வசனங்களில் ஆங்காங்கு பன்ச் வசனம் வைப்பது வழக்கம். ஆனால் வசனமே பன்ச் ஆக இருப்பது விஜயகாந்த் படங்களில் மட்டுமே. எப்போதாவது நார்மலாக வசனங்கள் இருக்கும்.

அந்த பாரம்பரியத்தின்படி விஜயகாந்த் நடிக்கும் 150வது படமான வித்தகனில் சூடு பறக்கும் பன்ச் வசனங்கள் இடம் பெறுகிறதாம். இந்த பன்ச் வசனங்களை கேப்டனுக்காக இயக்குநர் மாதேஷ் எழுதியுள்ளாராம்.

ஒரு தடவை ஜெயிச்சா பத்தாது, ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கணும் - இது ஒரு பானை சோறுக்கு ஒரு சாம்பிள் பருக்கை!

இதுகுறித்து மாதேஷ் கூறுகையில், விஜயகாந்த் சார் இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் வருகிறார் (வராவிட்டால்தான் ஆச்சரியம்!). ஆனால் இந்தப் படத்தில் வித்தியாசமாக செய்திருக்கிறார். இந்த கேரக்டர் கேப்டனுக்கு மட்டும்தான் பொருந்தும். வேறு யாரும் இந்த ரோலை செய்யவே முடியாது. அதுதான் இந்த கேரக்டரின் விசேஷமே என்கிறார்.

விரைவில் வித்தகன் குழு கனடாவுக்குப் பறக்கவுள்ளது. அங்கு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஒரு மாதத்திற்கு நடத்தவுள்ளனர். பிறகு சில காட்சிகளை அமெரிக்காவிலும் போய் படமாக்க உள்ளனர்.

வித்தகன் கதை என்னவாக இருக்கும் என குழம்பித் தவிக்க வேண்டியதில்லை. விஜயகாந்த் நடித்துள்ள 149 படங்களையும் ஒருமுறை ரெஃபர் செய்து வைத்துக் கொண்டால், வித்தகன் படத்தின் கதையையும் ஈசியாக கண்டுபிடித்து விடலாம்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil