»   »  மஞ்சுவிரட்டில் ரகளை-நடிகர் ரித்தீஷ் மீது வழக்கு

மஞ்சுவிரட்டில் ரகளை-நடிகர் ரித்தீஷ் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil
Rithish Kumar

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடந்த மஞ்சு விரட்டின்போது ரகளை செய்ததாக நடிகரும் அமைச்சர் சுப. தங்கவேலனின் பேரனுமான ரித்தீஷ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், சிராவயலில் நேற்று முன் தினம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது. அதைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நடிகரும், தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ரித்தீஷ் குமாரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வந்த ரித்தீஷ் குமார், தனது நண்பர்களோடு போலீஸார் போட்டிருந்த தடுப்புகளைத் தாண்டி அத்துமீறி வந்ததாகவும், விசிலடித்து பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தியதாகவும், கிராம நிர்வாக அதிகாரி போலீஸில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து ரித்தீஷ்குமார், அவரது நண்பர்கள் சண்முகநாதன், செந்தில்குமார் உள்ளிட்டோர் மீது கலகம் ஏற்படுத்துதல், அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil