twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹேப்பி பர்த் டே உதயநிதி ஸ்டாலின்... வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள்

    |

    சென்னை : நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், அரசியல்வாதி என பல முகங்களைக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, எம்எல்ஏ.,வாக இருந்து வருகிறார்.

    முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி, இன்று தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் அடுத்து இணையப் போவது இந்த இயக்குநருடனா? தீயாய் பரவும் தகவல்! நடிகர் ரஜினிகாந்த் அடுத்து இணையப் போவது இந்த இயக்குநருடனா? தீயாய் பரவும் தகவல்!

    சினிமா வாழ்க்கை

    சினிமா வாழ்க்கை

    2008 ம் ஆண்டு ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தை துவக்கிய உதயநிதி, விஜய் நடித்த குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் சினிமா உலகிற்குள் அடியெடுத்து வைத்தார். குருவி படத்தை தொடர்ந்து ஆதவன், எந்திரன், மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு ஆகிய படங்களை தயாரித்தார்.

     விநியோகஸ்தர் உதயநிதி

    விநியோகஸ்தர் உதயநிதி

    2010 ம் ஆண்டு சிம்பு நடித்த விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் விநியோகஸ்தர் ஆனார் உதயநிதி. மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா, பக்ரித், அரண்மனை 3 ஆகிய ஹிட் படங்களின் விநியோகஸ்தராகவும் இருந்தார் உதயநிதி.

    ஹீரோவான உதயநிதி

    ஹீரோவான உதயநிதி

    தயாரிப்பு, விநியோகம் ஆகியவற்றை தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்த துவங்கினார் உதயநிதி. 2012 ல் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற முழு நீள காமெடி படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார் உதயநிதி. இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான சைமா, ஃபிலிம்ஃபேர் விருதுகளை பெற்றார் உதயநிதி. நார்வே தமிழ் திரைப்பட விழாவிலும் சிறந்த புதுமுக நடிகருக்கான விருது உதயநிதிக்கு கிடைத்தது.

    Recommended Video

    உதயநிதி பிறந்த நாளுக்கு இலவச தக்காளி.. முண்டியடித்த பொதுமக்களால் டிராபிக் ஜாம் - வீடியோ
    உதயநிதி படங்கள்

    உதயநிதி படங்கள்

    முதல் படமே செம ஹிட் ஆனதால் தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். கடைசியாக 2020 ல் இவர் நடித்த சைகோ படம் ரிலீசானது. அதற்கு பிறகு அரசியலில் பிஸியானார் உதயநிதி.

    எம்எல்ஏ., ஆன பிறகும் நடிப்பு

    எம்எல்ஏ., ஆன பிறகும் நடிப்பு

    தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகி விட்டதால் இனி உதயநிதி நடிக்க மாட்டார் என தகவல் பரவியது. ஆனால் அவற்றை பொய்யாக்கி தற்போது ஒரே சமயத்தில் கண்ணை நம்பாதே, ஏஞ்சல், நெஞ்சுக்கு நீதி, மகிழ்திருமேனி இயக்கும் பெயரிடப்படாத படம் ஆகிய 4 படங்களில் நடித்து வருகிறார் உதயநிதி. இதில் நெஞ்சுக்கு நீதி படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தான் தயாரிக்கிறார்.

    பிரபலங்கள் வாழ்த்து

    பிரபலங்கள் வாழ்த்து

    ஹீரோ, எம்எல்ஏ, கட்சி பிரமுகர் என அனைத்தையும் பேலன்ஸ் செய்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார் உதயநிதி. அவரது பிறந்த நாளை முன்னிட்டு போனி கபூர், சீனு ராமசாமி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் உதயநிதிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    English summary
    Actor, producer, distributor, MLA Udhayanidhi Stalin celebrates his birthday today. Udayanidhi is balancing everything as a hero, MLA, party figure and performing well. Many cinema celebrities including Bonnie Kapoor and Seenu Ramasamy have congratulated Udayanidhi on his birthday on Twitter. At present, he is acting in 4 films including boney kapoor's nenjuku needhi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X