»   »  சீயானுக்கு 5!

சீயானுக்கு 5!

Subscribe to Oneindia Tamil

சீயான் விக்ரம் முதல் முறையாக ஐந்து வேடம் பூண்டு கந்தசாமியில் கலக்கப் போகிறார்.

தமிழ்த் திரையுலகம் சமீப ஆண்டுகளில் கண்டெடுத்து நடிப்பு முத்துக்களில் ஒருவர்தான் விக்ரம். ஈடுபாட்டோடும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் நடிக்கும் கலைஞர் விக்ரம்.

தான் பூணும் வேடத்தோடு ஒன்றாகக் கலந்து போய் கலக்குவார் விக்ரம். 100 சதவீத உழைப்பைக் கொடுக்கும் விக்ரம், தான் பூண்டுள்ள வேடம் தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக கடுமையாக மெனக்கிடவும் தயங்காதவர்.

பீமாவை முடித்த கையோடு, தற்போது கந்தசாமி படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படத்தில் ஐந்து வேடங்களில் நடிக்கிறாராம் விக்ரம்.

இதுகுறித்து கந்தசாமி யூனிட் தரப்பிலிருந்து நாம் கறந்த தகவல்களின்படி, விக்ரம் போடவுள்ள ஐந்து வேடங்களில் ஆப்பிரிக்க பழங்குடியினர் வேடமும் ஒன்று. இந்த வேடம் தொடர்பான காட்சிகளை ஷூட் செய்வதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு விரைவில் பறக்கவுள்ளனராம்.

அங்கு தற்போது ஆப்பிரிக்க பழங்குடியினர் வசித்து வரும் அடர்ந்த காடுகளைத் தேடிப் போய் படம் பிடிக்கவுள்ளனராம். இந்த வேடத்தை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்பதற்காக இயக்குநர் ஏற்கனவே ஆப்பிரிக்கா போய் விட்டார்.

அங்கு வேடத்திற்குத் தேவையான தகவல்களை சேகரித்து வருகிறார். விக்ரமுக்குப் போட வேண்டிய கெட்டப், மேக்கப் குறித்தும் பல முக்கியத் தகவல்கள், புகைப்படங்களை சேகரித்துள்ளாராம்.

ஏற்கனவே கலைஞானி கமல்ஹாசன், தசாவதாரம் படத்தில் ஆப்பிரிக்க பழங்குடியின வேடத்தில் வருகிறார். இதற்காக தசாவதாரம் யூனிட் தென் ஆப்பிரிக்காவுக்குப் போய், அரசின் அனுமதியுடன் அடர்ந்த வனப் பகுதிகளில் படம் பிடித்தார்கள்.

தற்போது கலைஞானியைத் தந்த பரமக்குடியின் இன்னொரு வாரிசான சீயான் விக்ரமும், கமல் பாதையில் நடைபோடப் போகிறார்.

சர்ரியான போட்டியப்பா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil