»   »  மக்களுக்கு உதவி செய்யுங்கள்... ஆனால் புகைப்படம் வேண்டாமே- ஜெயம் ரவி

மக்களுக்கு உதவி செய்யுங்கள்... ஆனால் புகைப்படம் வேண்டாமே- ஜெயம் ரவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் ஆனால் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று நடிகர் ஜெயம்ரவி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிற நடிக, நடிகையருடன் இணைந்து நடிகர் ஜெயம் ரவியும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.

Chennai Rain: Actor Jayam Ravi Request

தனது பகுதி மக்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் புரிந்து வரும் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் பின்வரும் கோரிக்கையை விடுத்திருக்கிறார்.

"அன்பார்ந்த தன்னார்வலர்களே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.ஆனால் அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள்" என்று அவர் கூறியிருக்கிறார்.

நியாயமான கோரிக்கைதான் ஆனால் நமது மக்கள் பின்பற்றுவார்களா?

English summary
Chennai Rain: Actor Jayam Ravi Request to Volunteers "Sincere request Please do not take Photo Graphs".
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil