»   »  ஆர்யா படத்துக்கு செருப்பு மாலை... இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

ஆர்யா படத்துக்கு செருப்பு மாலை... இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழரையும் தமிழர் ரசனையயும் கீழ்த்தரமாகப் பேசிய நடிகர் ஆர்யாவின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது இந்து மக்கள் கட்சி.

வெளிநாட்டு பட விழாவொன்றில் ஆர்யா பங்கேற்றுப் பேசும்போது, நான் ஒரு மலையாளி. தமிழ் படங்களில் நடிக்க தெரியாதவர்களும் நடிக்கலாம். அவர்கள் அந்த அளவுதான் ரசிப்பார்கள். பணம் கொட்டும். ஆனால் மலையாள படங்களில் நடிக்க தெரிந்தவர்களால் மட்டுமே நடிக்க முடியும். இங்குதான் தரமான படங்கள் வருகின்றன, என்று கூறியிருந்தார்.

இதனை ஃபெப்ஸி அமைப்பின் தலைவர் வி சி குகநாதன் கண்டித்துப்பேசினார்.

அவரைத் தொடர்ந்து, இவ்விஷயத்தைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள இந்து மக்கள் கட்சி.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் அண்ணாதுரை ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். ஆர்யா உருவப் படத்தக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் நடிகர்களை இழிவுபடுத்தி பேசிய நடிகர் ஆர்யா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் பல்லடத்தில் நடந்த போராட்டம் தமிழக மெங்கும் தொடரும். அவர் நடித்து விரைவில் ரிலீசாக உள்ள சிக்குபுக்கு படத்தை எதிர்த்தும் போராட்டம் நடத்துவோம். தமிழ் சினிமாவில் சம்பாதித்து விட்டு தமிழ் நடிகர்களை கேவலமாக பேசி இருப்பது கண்டனத்துக்குரியது. ஆர்யா தாராளமாக தரமான படங்கள் எடுக்கும் மலையாள பட உலகுக்கு போகலாம்..." என்றார்.

சிக்குபுக்கு படம் வரும் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil